நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக் 22) வருகை தந்தார். வரும் வழியில் மல்லூர் பிரிவு சாலை, இராசிபுரம், புதுச்சத்திரம் , புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நாமக்கல் - பரமத்தி சாலையில், செலம்ப கவுண்டர் பூங்கா அருகே திமுக சார்பில் அமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமமைச்சர் மு.கருணாநிதியின் 8 அடி உயர (பீடத்துடன் 22 அடி) வெண்கல திருவுருவச் சிலையை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்ட மக்களின் பேரன்பில்…🖤♥️ pic.twitter.com/QXgsHTeIBz
— M.K.Stalin (@mkstalin) October 22, 2024
இதையும் படிங்க : தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 840 கோடி ரூபாய் இழப்பு! - சாம்சங் நிறுவனம் நீதிமன்றத்தில் தகவல்
பின்னர், வெண்கல சிலைக்கும், சிலையின் அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கும், மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோரைப் பார்த்து உற்சாகமாக கை அசைத்தார்.
எங்கும் நிறைந்து - நிலைத்து நிற்கும் தமிழினத் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலை நாமக்கல் மாநகரில்! pic.twitter.com/HK0L0ip3CV
— M.K.Stalin (@mkstalin) October 22, 2024
தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதியின் சிலைக்கு கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது தூரம் ரோட் ஷோ நடத்தினார். இந்த நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மதிவேந்தன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்