ETV Bharat / state

தொடரும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை.. மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்! - MK Stalin Letter to S Jaishankar - MK STALIN LETTER TO S JAISHANKAR

CM STALIN LETTER: இலங்கை கடற்படையினரால் கைதான 47 தமிழக மீனவர்களையும், 166 மீனவ படகுகளையும் மீட்டுத்தர மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்ருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 5:20 PM IST

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது இலங்கை வசம் உள்ள 47 மீனவர்கள் மற்றும் 166 மீன்பிடிப் படகுகளை விடுவித்திட கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்திடவும் வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “ஜூன் 25ஆம் தேதியான இன்று IND-TN-12-MM-5138 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். 2024ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 27 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதை தடுக்கவும். தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும், கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்கு தேவையான நடவடிக்கையை விரைந்து எடுத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காதலர் தினம் தெரிந்த இளைஞர்களுக்கு எமர்ஜென்சி நாள் தெரிவதில்லை அண்ணாமலை பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.