ETV Bharat / state

தமிழகத்தில் இதுவரை ரூ.109.76 கோடி பறிமுதல்! தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுவது என்ன? - Sathya Pratha Sahoo - SATHYA PRATHA SAHOO

Chief Electoral Officer Sathya Pratha Sahoo: தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 109.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Sathya Pratha Sahoo
சத்யபிரதா சாகு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 8:28 PM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் வரும் 3ஆம் தேதி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உடன் ஆலோசனை மேற்கொள்கிறார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றைத் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, தமிழகத்திற்கு மாநில அளவிலான செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ணன் இன்று தமிழகம் வந்துள்ளார். இவர், மாநிலம் முழுவதும் பயணம் செய்து செலவினங்களைக் கண்காணிக்க உள்ளார்.

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது. வரும் 3 ஆம் தேதி மாலை தலைமைத் தேர்தல் ஆணையர் அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், வரும் 4ஆம் தேதி தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

பூத் சீலிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 109.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சி-விஜில் மூலம் 1,822 புகார் வந்துள்ள நிலையில், அதில் 1,803 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19 புகார்களுக்கு மட்டுமே இன்னும் தீர்வு காண வேண்டியுள்ளது என்றார்.

மேலும், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் உள்ள கலைஞர் அருங்காட்சியகத்தில் ஒளிபரப்பப்படும் ஒளி, ஒலி காட்சிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என அதிமுக கொடுத்த புகாரின் அடிப்படையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை மற்றும் பொதுப்பணித்துறையிடம் விளக்கம் கேட்டு இருப்பதாகவும், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் உள்ள தேர்தல் பணியாளர்களுக்கு, தீவிரவாதிகள், ரவுடிகள் மூலமாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு மரணம் அடைந்தால், அவர்களுக்கு ரூ.30 லட்சமும், மிக பெரிய காயம் அடையும் நிலை ஏற்பட்டால் ரூ.7.5 லட்சமும், சிறிய காயம் என்றால் ரூ.40 ஆயிரமும் தேர்தல் ஆணையம் வழங்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பிரதமர் கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்டு இருக்கலாமே.. வாக்கு பெற மலிவான அரசியலில் பாஜக ஈடுபடுகிறது. - சிபிஐ முத்தரசன்! - CPI Mutharasan Slam PM Modi

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.