ETV Bharat / state

கட்டட அனுமதி எளிமையாக்கப்படும்.. சுய சான்றிதழ் மூலம் இனி கட்டட அனுமதி பெறலாம் - அமைச்சர் தங்கம் தென்னரசு.. - தமிழ்நாடு பட்ஜெட் 2024

Minister Thangam Thennarasu: பொதுமக்கள் சுய சான்றிதழ் மூலமாகக் கட்டட அனுமதி பெற புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 3:53 PM IST

சென்னை: கட்டிட அனுமதி - நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காகிதமற்ற முறையில் இணைய தளம் வாயிலாகக் கட்டட விண்ணப்பங்கள் பெறுதல், பரிசீலித்தல், கட்டணம் வசூலித்தல், அனுமதி வழங்குதல், அனுமதி வழங்கிய பின் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவான அறிவிப்பினை தமிழக அரசு முன்பு வெளியிட்டிருந்தது.

அதில், "கட்டட விண்ணப்பங்கள் மற்றும் வரைபடங்களைத் தயார் செய்யத் தகுதி வாய்ந்த தொழில் சார்ந்த வல்லுநர் பதிவுக்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே பெற்று, அவர்கள் சமர்ப்பித்த சான்றுகளை, இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவால் ஆய்வு செய்த பின்னர், தொழில் சார்ந்த வல்லுநருக்குப் பதிவுச் சான்று வழங்கப்பட வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட விவரங்கள் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்கள் கட்டட விண்ணப்பங்களையும், இணைப்பு ஆவணங்களையும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், விண்ணப்பங்களை நேரடியாகச் சமர்ப்பிக்கும் முறை (Submission of Application through Offline) முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

கட்டட விண்ணப்பங்களை onlineppa.tn.gov.in இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டட விண்ணப்பத்துடன் பட்டியலில் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச ஆவணங்கள் கண்டிப்பாகச் சமர்ப்பிக்கப்பட்டதனை உறுதி செய்ய வேண்டும். சமர்ப்பிக்கும் விண்ணப்பம் http://tnurbaneseva.tn.gov.in இணைய தளம் வாயிலாகச் சம்மந்தப்பட்ட பகுதியின் நகர அமைப்பு ஆய்வாளர், இளநிலை பொறியாளர் அல்லது உதவிப் பொறியாளர்களின் பணிப்பட்டியலில் சேர்க்கப்படும்.

பிற துறைகளின் பெயரில் வசூலிக்கப்படும் கட்டணங்களை நகராட்சி அல்லது மாநகராட்சியின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்துவதாகத் தெரிய வந்தால், சம்மந்தப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சி ஆணையர், கணக்கர் மற்றும் பொறுப்பானவர்கள் மீது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல், மனைப் பிரிவுகள் ஆகியவற்றிற்கு ஒற்றைச் சாளர முறையில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இத்திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. ஆகையால், இனி அனைத்து நடவடிக்கைகளும், இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படும்" என அனைத்து மாவட்ட துணை இயக்குநர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தி, சுய சான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என இன்று (பிப்.19) தமிழக பட்ஜெட் தாக்கலில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அதன்படி, இணையதளம் வாயிலாக அதிகபட்சம் 2 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில், 3 ஆயிரத்து 500 சதுர அடி கட்டடப் பரப்பளவிற்குள் கட்டப்படும் குடியிருப்புக் கட்டுமானத்திற்கு உடனடியாகப் பதிவு செய்து, சுய சான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும். அவ்வாறு உடனடி பதிவு செய்யப்படும் கட்டடங்களுக்குக் கட்டட அனுமதி மற்றும் மணி முடிவுச் சான்று பெறத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2024: முக்கிய அறிவிப்புகள் விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.