ETV Bharat / state

தமிழக பட்ஜெட் 2024; மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை சார்பான அறிவிப்புகள் என்ன? - Tamil Nadu Fishermen

Tamil Nadu Budget 2024: 2024 - 2025 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், செயற்கை மீன் உறைவிடங்கள் போன்ற கரையோரப் பாதுகாப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் ரூபாய் 450 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

fishermen and fisheries department budget 2024
மீனவர்கள் மற்றும் மீன்வளத் துறை பட்ஜெட் 2024
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 6:14 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று (பிப்.19) 2024 - 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அதில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை சார்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், "மீன்பிடித் தொழில், இந்தியாவில் ஐந்தாவது பெரிய மாநிலமாகத் தமிழ்நாட்டைத் திகழவைக்கும் மீனவர்கள் மீது இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் 2 லட்சத்து 77 ஆயிரம் மீனவர்கள் பயன்பெறும் வகையில், சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களும், புதிய பணிகளும் அறிவிக்கப்பட்டன.

மீன்பிடித் தடைக் கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவானது, மாதம் ஒன்றிற்கு 3,400 லிட்டரிலிருந்து 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் வழங்கப்படும் டீசல் எண்ணெய்யின் அளவு, விசைப் படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டரிலிருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வருகிற நிதியாண்டில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், இராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தூண்டில் வளைவு, மீன் இறங்கு தளம், தூர் வாருதல், செயற்கை மீன் உறைவிடங்கள் போன்ற கரையோரப் பாதுகாப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள்: காவிரி முதல் வைகை வரை பட்ஜெட்டில் அறிவிப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.