சென்னை: 2024 - 2025ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 21) மானிய கோரிக்கை மீதான விவதாம் நடைப்பெற்றது. அப்போது, அமைச்சர்கள் தங்கள் துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். அப்போது சட்டசபையில் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி முக்கிய அறிவிப்புகளை வெளிட்டார்.
அமைச்சர் முத்துசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:
- மதுவிலக்கு மற்றும் ஆயாதீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்று விடுதலையான மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதியாக சுயதொழில் தொடங்க 50 ஆயிரம் மானியமாக வழங்கிடும் வகையில் 5 கோடி மறுவாழ்வு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும்.
- மாநிலம் முழுவதும் உள்ள 45 மதுவிலக்கு சோதனை சாவடிகளில் வாகனப் பதிவின் அடையாளம் காணும் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை நிறுவப்படும்.
- அமலாக்க பணியகம் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் இயங்கும் மத்திய நுண்ணறிவு பிரிவில் பணிபுரியும் காவல் அலுவலர்களுக்கு தொழில்நுட்ப கருவிகள் வழங்கப்படும் ஆகிய 4 புதிய அறிவிப்புகள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
- மேலும், 300 சதுர மீட்டர் மற்றும் 14 மீட்டர் உயரத்திற்குள் கட்டட பரப்பளவு கொண்ட உள்ள அனைத்து வணிக கட்டடங்களுக்கும் கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு.
- சென்னையில் சிஎம்டிஏ உள்ளது போல, கோவை, திருப்பூர், மதுரை, ஓசூர், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- 10 ஆயிரம் சதுர அடிக்குள்ளே உள்ள குடியிருப்புப் கட்டடங்களுக்கு, 2 ஆயிரம் சதுர அடிக்குள்ளே உள்ள வணிக அலுவலகங்களுக்கு அதிகாரப்பகிர்வை அவர்களே அனுமதி கொடுத்துக் கொள்ளலாம். வேறு எங்கேயும் வரத் தேவையில்லை.
- சென்னை பெருநகர பகுதிக்கு புதிய வாகன கொள்கை உருவாக்கப்படும்.
- செங்கல்பட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள இரண்டு கூட்டுறவு வீட்டு வசதி சமையலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் கட்டப்படும்.
- நில உபயோக வகைபாடுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள வசதியாக "நில பயன் தகவல் அமைப்பு" (Land Use Information System) உருவாக்கப்படும்.
- ஈரோடு மாவட்டம் சம்பத் நகர் பகுதியில் 108 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்டப்படும்.
- வீட்டு வசதி துறை சார்பில், ரூ.1,955 கோடி மதிப்பில் இடம், வீடு உள்ளிட்ட 3 ஆயிரத்து 967 கட்ட வேலைகள் நடந்து வருகிறது உள்ளிட்ட பல அறிவிப்புகளை அறிவித்தார்.