திருநெல்வேலி: நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ராபர்ட் ப்ரூஸ் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட 1,65,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சிகள் | பெற்ற வாக்குகள் |
1 | ராபர்ட் புரூஸ் | காங்கிரஸ் | 5,02,296 |
2 | நயினார் நாகேந்திரன் | பாஜக | 3,36,676 |
3 | ஜான்சி ராணி | அதிமுக | 89,601 |
4 | சத்யா | நாதக | 87,686 |
திருநெல்வேலி தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
- நெல்லையில் மொத்தம் 10,60,461 வாக்குகள் பதிவான நிலையில் 20வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 463523 வாக்குகள் பெற்றதோடு 157,513 வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலையில் உள்ளார். 2வது இடத்தில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் 3,06,010 வாக்குகள் வாங்கியுள்ளார். இன்னும் 84000 வாக்குகள் மட்டுமே எண்ண வேண்டியிருப்பதால் காங்கிரஸ் வெற்றி உறுதியாகவிட்டது.
- முன்னதாக, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மற்றும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இடையே கடும் போட்டி நடைபெற்று வந்தது. ஒரு கட்டத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வந்தார்.
- மாலை 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் இதுவரை 2,60590 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து, பாஜக வேட்பாளர் நயினார்நாகேந்திரன் 179478 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் அவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியா 49852 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்திலும் உள்ளனர்.
- நான்காவது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 91,708 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் நயினார்நாகேந்திரன் 63,706 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் அவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியா 17,768 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்திலும் உள்ளனர். அதிமுக வேட்பாளர் ஜான்ஸ்ராணி 17,206 வாக்குகள் பெற்றுள்ளார். அந்த வகையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 28,002 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
- மூன்றாம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 20,198 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இதுவரை பதிவான வாக்குகள் அடிப்படையில் காங்கிரஸ் 67,849 வாக்குகளும், பாஜக 47,651 வாக்குகளும் பெற்றுள்ளது. அதேபோல, நாம் தமிழர் கட்சி 13,574 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் அதிமுக 12,979 வாக்குகள் பெற்றுள்ளது.
- இரண்டாம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 43,496 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து பாஜக வேட்பாளர் 33,216 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 8,137 வாக்குகளும் பெற்றுள்ளனர். அவர்களை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட அதிக வாக்குகளாக 8,755 வாக்குகள் பெற்றுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் வேட்பாளர் 10,280 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
- முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 20,786 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 16,578 வாக்குள் பெற்று இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 4032 வாக்குள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 3765 வாக்குகள் பெற்று 4ஆம் இடத்தில் இருக்கிறார்.
தென்தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதியாக திகழும் திருநெல்வேலியை பொறுத்தவரை சாதி பிரச்சனைகள், 4 கோடி பணம் பறிமுதல், காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரணம் என தேர்தலுக்கு முன்பும், பின்பும் தொகுதி பரபரப்பாகவே காணப்பட்டது. இங்கு திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ராபர்ட் ப்ரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கினர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், நெல்லை காங்கிஸ் வேட்பாளர் மீது சொந்தக் கட்சிக்காரர்களே அதிருப்தியில் இருந்தது, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை மையமாக வைத்து எழுந்த 4 கோடி ரூபாய் பண விவகாரம் என பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத தொகுதியாக நெல்லை விளங்கியது. திமுக கூட்டணி பலத்தில் நிற்கும் காங்கிரஸ் மற்றும் லோக்கல் வெயிட் என்ற முறையில் களம் கண்டுள்ள பாஜக என இரு தேசியக் கட்சிகளுக்கும் இடையே இங்கு நீயா, நானா போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2019 தேர்தலில் வென்றது யார்?: 2019 மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் மொத்தம் 10,29,382 வாக்குகள் பதிவாகின. திமுக சார்பில் ஞானதிரவியம், அதிமுகவில் மனோஜ் பாண்டியன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் ஞானதிரவியம் 5,22,993 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். இரண்டாவது இடத்தில், அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டின் 3,37,273 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சத்யா 49,935 வாக்குகளும் பெற்றனர்.