ETV Bharat / state

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி; 2 வெடிகுண்டு நிபுணர்களின் கண்காணிப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்! - Thiruvallur Lok Sabha Constituency

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 7:04 PM IST

Thiruvallur Lok Sabha Constituency: திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும், தேர்தல் பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

Thiruvallur Lok Sabha Constituency
Thiruvallur Lok Sabha Constituency

திருவள்ளூர்: திருவள்ளூர் நாடாளுமன்றத் தனித் தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று (ஏப்.19) வாக்குப்பதிவு நடைபெற்றது. திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில், மொத்தமாக 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ள நிலையில், 14 லட்சத்து 23 ஆயிரத்து 285 வாக்காளர்கள், அதாவது 68.26 சதவீதம் பேர் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரி வளாகத்தில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதனை மாவட்டத் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரபு சங்கர், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் அபு இம்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பார்வையிட்டார். அதன்பின், அந்த அறைக்கு சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைப் பாதுகாக்கும் பணியில், 39 மத்திய எல்லைப் பிரிவு பாதுகாப்புப் படையினர், துணை ஆணையர் தலைமையிலான காவலர்கள், 40 தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், 2 வெடிகுண்டு கண்டுபிடித்துச் செயலை இழக்கும் பிரிவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை மற்றும் வெளிப் பகுதியைச் சுற்றி 728 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: விஜய்க்கு கவிதை எழுதி உலக சாதனை.. கில்லி ரீரிலீஸ் நாளில் சுவாரஸ்ய நிகழ்வு! - Vijay Fan World Record

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.