ETV Bharat / state

காஷ்மீரில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்: 42 குண்டுகள் முழங்க நல்லடக்கம்.. திருவள்ளூர் ஆட்சியர் நேரில் மரியாதை!

காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஸ்டான்லி உடலுக்கு, தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் அரசு மரியாதை செய்தார். பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஸ்டான்லி, அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர்
ஸ்டான்லி, அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2024, 8:05 PM IST

திருவள்ளூர்: திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை வட்டம் பெரிய ராமாபுரம் கிராமத்தில் வசிப்பவர் பெருமாள். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மகன் பி.ஸ்டான்லி இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ராணுவ வீரரான ஸ்டான்லி ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் நாய்க் சுபேதார் வீரராக பணியாற்றி வருகிறார். இவர் லடாக் பகுதியில் கடந்த 9 ஆம் தேதி ராணுவ வீரர்களுக்கு வாகனத்தில் உடைகள் எடுத்துச் சென்றுள்ளார்.

அப்பொழுது மலைப்பகுதியில் ராணுவ வாகனம் நிற்கும் பொழுது பின்னால் வந்த ஒரு லாரி மோதிய விபத்தில் ராணுவ வீரர் ஸ்டான்லி மரணம் அடைந்தார். அவரது உடல் ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லி எடுத்து வரப்பட்டு, அதன் பின் சென்னைக்கு விமான மூலம் எடுத்து வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனத்தில் அவரது சொந்த ஊரான பெரிய ராமாபுரம் கிராமத்திற்கு அவரது உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு ராணுவ வீரர் ஸ்டான்லி உடலுக்கு கிராம மக்கள், முன்னாள் ராணுவத்தினர் மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: விவாகரத்து மனு தள்ளுபடி ஆனாலும் இழப்பீடு - பொய்க்காரணம் சொன்ன கணவருக்கு உத்தரவு

இதனை அடுத்து அரசு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து ராணுவ வீரர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து 42 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யப்பட்டு கிறிஸ்தவ முறைப்படி ராணுவ வீரர் ஸ்டான்லி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.