ETV Bharat / state

100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்ணுக்கு 40 கோடி ஜிஎஸ்டியா? - என்னை காப்பாற்றுங்கள் எனக் கதறி அழுத பெண்! - WOMAN GETS 40 CRORE GST - WOMAN GETS 40 CRORE GST

WOMAN GETS 40 CRORE GST: திருப்பத்தூர் அருகே 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்மணிக்கு விழுப்புரம் மாநில வணிக வரி அலுவலகத்தில் இருந்து 40கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த மலர்
திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த மலர் (Credit - ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 9:32 PM IST

பாதிக்கப்பட்ட பெண் பேட்டி (Credit - ETVBharat TamilNadu)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி மலர் (54). இவர் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி, மலருக்கு விழுப்புரம் மாநில வணிக வரி துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், TN GST act-ன்படி 21 கோடியே 92 லட்சத்து 29ஆயிரத்து 406 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், மேலும் 2020, 2021 மற்றும் 2022 ஆகிய மூன்றாண்டின் CGST மற்றும் SGST என இரண்டு ஜிஎஸ்டிக்கும் அபராதம் அதற்கு உண்டான வட்டி என சுமார் 40கோடி செலுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மலர் இது குறித்துத் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது பிரச்சனையைத் தீர்க்கும்படி புகார் அளித்துள்ளார். மேலும், இது குறித்து மலர் கூறுகையில், நான் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்கிறேன். தான் வீட்டின் அருகே உள்ள மகளிர் குழுவில் தனது ஆதார் கார்டு மற்றும் பேன் கார்டு கொடுத்து அவ்வப்போது கடன் பெற்று வந்தேன்.

இதனைப் பயன்படுத்தி எம்கே ட்ரேடர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தனக்கு இவ்வளவு ஜிஎஸ்டி தொகை கட்ட வேண்டும் என நோட்டீஸ் வந்திருக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வில் முதல்முறை தோல்வி.. துவளாத பூக்கடை தொழிலாளி மகளின் சாதனை! - Mayilduthurai Neet Passed Student

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.