ETV Bharat / state

தொழிற்சாலைக் கழிவுகளால் நுரை பொங்கி ஓடும் பாலாறு.. விவசாயிகள் வேதனை!

Tirupattur Palar River: திருப்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் பாலாற்றில் கலப்பதால் ஆறு நுரை பொங்கிக் காணப்படுகிறது.

தொழிற்சாலை கழிவுகளால் நுரை பொங்கி ஓடும் பாலாறு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 6:21 PM IST

தொழிற்சாலை கழிவுகளால் நுரை பொங்கி ஓடும் பாலாறு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பாலாறு, தொழிற்சாலைக் கழிவுகளால் மாசடைந்து காணப்படுகிறது. வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரைத் தொழிற்சாலை நிர்வாகம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், நேரடியாகப் பாலாற்றில் திறந்து விடுகின்றனர்.

இதனால், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு தரைப்பாலத்தின் கீழ் ஓடும் பாலாறு நீர் துர்நாற்றத்துடன் நுரை பொங்கி ஓடுகிறது. மேலும், பாலாற்றில் உள்ள பல்லாயிரக்கணக்கான மீன்கள் தோல் கழிவுகளால் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலாற்றில் தோல் கழிவுநீரை விடக்கூடாது எனச் சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் பலமுறை போராடியும் பலனில்லை எனத் தெரிவிக்கின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகம் முதல் தமிழக அரசு வரை அனைத்து அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரையில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும், பாலாறு என்று ஓர் ஆறு இருப்பது தெரியாமல், இருப்பதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவில்லை எனவும், சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும், குற்றஞ்சாட்டுகின்றனர். பாலாறு நீர் குறித்து பலதரப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாலாறு படுக்கைகளில் உள்ள நிலத்தடி நீர் குடிக்கக் கூட முடியாத நிலையில், மிகவும் மாசடைந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், பொதுமக்களும், கால்நடைகளும் மாசடைந்த நீர்களைத் தான் குடித்து வருவதாகவும், இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பாலாற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மன் கி பாத் நிகழ்ச்சி மூன்று மாதங்களுக்கு கிடையாது - மோடி சொன்ன காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.