ETV Bharat / state

“ரேஞ்சருக்கு மட்டுமில்ல எங்களுக்கும் கொடுக்கணும்”.. லஞ்சம் வாங்கும் வனத்துறையினர்.. வைரலாகும் வீடியோ! - forest officials taking bribe - FOREST OFFICIALS TAKING BRIBE

Forest officials taking bribe in Tirupathur: திருப்பத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து மரங்களை வெட்டிக் கொண்டு செல்லும் லாரிகளை மடக்கி, வேலூர் மண்டல வனப் பாதுகாப்பு படை அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லஞ்சம் பெற்ற வனத்துறை அதிகாரி
லஞ்சம் பெற்ற வனத்துறை அதிகாரி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 9:10 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வேலூர் மண்டல வனப் பாதுகாப்பு படை அலுவலராக இருப்பவர் மூர்த்தி. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வன பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் இவர், பல இடங்களில் லஞ்சம் பெற்று வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.

வனத்துறையினர் லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ வைரல் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, நிம்மியம்பட்டு, ஆலங்காயம், ஏலகிரி, புதூர்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் இருந்து மரங்களை வெட்டிச் செல்வதாக பல புகார்கள் எழுகின்றன. இந்த நிலையில், வேலூர் மண்டல வன பாதுகாப்பு படை அலுவலர் மூர்த்தி, மரங்களை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெறும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில், "என்னப்பா 100 ரூபாய் கொடுத்தா எப்படி" எனக் கூறியுள்ளார். மேலும், சக அதிகாரிகளிடம் “நான் மட்டும்தான் பேசணுமா.. வாயில் என்ன கொழுக்கட்டை வச்சிருக்கீங்கள்ளா.. 500 கொடுத்தாலும் வாங்கிரு..” என்று கூறுகிறார். மேலும், அவருடன் பணியாற்றும் ஜோதி மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய அதிகாரிகள் உள்ளனர்.

அதேபோல், வெட்டப்பட்ட மரங்களை வியாபாரத்திற்கு எடுத்துச் செல்லும் நபரிடம் பகிரங்கமாக மாமூல் கேட்டபோது, அந்த ஓட்டுநர் தான் ரேஞ்சருக்கு லஞ்சம் கொடுப்பதாகக் கூறியதும், அதற்கு இவர் "ரேஞ்சருக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் கொடுக்கணும்" என்று கூறிய வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

மேலும், மற்றொரு நபரிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கிக் கொள்ளும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வனப்பகுதிக்குள் விதியை மீறி செயல்படும் நபரகளை கட்டுப்படத்தக்கூடிய வனத்துறை அதிகாரிகள், லஞ்சத்தை பெற்றுக் கொண்டு சட்ட விரோத செயல்களை கண்டும் காணாமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இது குறித்து உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு; சட்டமன்ற கூட்டத்தொடரில் காரசார விவாதம்.. அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.