திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவுடிகளையும் கண்காணித்து, கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் தலைமறைவாக இருந்த மூன்று ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டரும் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணி என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பதுங்கி இருப்பதாக தமிழ்நாடு ரவுடி ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தனிபடை போலீசார் மூணாறுக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த ரவுடி எஸ்டேட் மணியை துப்பாக்கி முனையில் இன்று கைது செய்துள்ளனர்.
ரவுடி எஸ்டேட் மணி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவைவில் உள்ளது. மேலும் இவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தலைமறைவாகிவியுள்ளார். அதனால் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகாமல் இருந்ததால் அவரை பிடிப்பதற்கு பிடி ஆனை பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மூன்று பேர் படுகொலை வழக்கு; குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை - நெல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ரவுடி எஸ்டேட் மணி வேலுர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது சிறையில் ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ரவுடி எஸ்டேட் மணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்த வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவரை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்