ETV Bharat / state

ஒரே நாளில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைக்கு தீர்வு.. நெல்லை மேயர் அதிரடி! - Nellai Sanitation workers salary - NELLAI SANITATION WORKERS SALARY

Tirunelveli Mayor: திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் சம்பள பாக்கியை ஒரே நாளில் அவர்களது வங்கிக் கணக்கிற்கு ஏற்றி விட்டு மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாநகராட்சி மேயர்
மாநகராட்சி மேயர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 8:06 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியானது 55 வார்டுகளைக் கொண்டுள்ளது. இந்த வார்டுகள் திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நெல்லை முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 250 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சி சார்பில் நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் சுமார் 1,700 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தப் பணியாளர்களில் 260 பேர் மட்டுமே மாநகராட்சியின் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிரந்தரம் இல்லாத பணியாளர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நேரடியாக சம்பளம் வழங்கி வந்தது. இந்நிலையில், மாநகராட்சியின் தூய்மைப் பணி தனியார் நிறுவன ஒப்பந்தத்திற்கு விடப்பட்டது. அதன் அடிப்படையில், சுமார் 700 ஊழியர்கள் தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரிந்து சம்பளம் பெற்று வருகின்றனர். இந்த நடைமுறை கடந்த சில மாதங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இது தவிர 583 பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பணியாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சி நேரடியாக சம்பளம் வழங்கி வந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த பணியாளர்களையும் தனியார் நிறுவனத்தில் இணைத்தனர்.

இதனால் ஐந்து மாதங்களாக தனியார் நிறுவனம் இவர்களுக்கு சம்பளம் வழங்கியது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த தூய்மைப் பணியாளர்கள் தனியார் நிறுவனத்தில் தங்களை இணைக்காமல், தொடர்ந்து மாநகராட்சி மூலம் நேரடியாக பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பழையபடி மாநகராட்சியின் கீழ் ஒப்பந்தப் பணியாளர்களாக பணிபுரிய சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேநேரம், மாநகராட்சியின் மினிட்ஸ் புத்தகத்தில் தீர்மானம் ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான உத்தரவு இடம் பெறாத காரணத்தால், தொடர்ச்சியாக மகளிர் சுய உதவிக் குழு பணியாளர்கள் தனியார் நிறுவனத்தின் கீழ் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது போன்ற குழப்பத்தால் சில மண்டலங்களில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அந்த வகையில், தச்சநல்லூர் மண்டலத்தில் பணிபுரியும் சுமார் 103 ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி புதிய மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணனைச் சந்தித்து குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தூய்மைப் பணியாளர்களின் சம்பள விவரங்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் கேட்டறிந்தார். மேலும், புதிய ஆணையரான சுக புத்ராவை தொடர்பு கொண்டு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையில், மகளிர் சுய உதவிக் குழு பணியாளர்களுக்கு மாநகராட்சி நேரடியாக சம்பளம் வழங்குவது தொடர்பான தீர்மானம் மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் பெறாததால் சம்பளம் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உள்ளாட்சி சட்ட விதிகளின் படி, தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனே சம்பளம் போட மேயர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அன்று இரவு முழுவதும் அனைவருக்கும் ஊதியம் வங்கிக் கணக்கிற்குச் சென்ற பிறகே தூங்கியதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேயரின் இந்த நடவடிக்கையால் ஊழியர்கள் அனைவருக்கும் அன்றிரவே வங்கிக் கணக்கில் சம்பளம் ஏற்றப்பட்டு விட்டது. இதனால் தூய்மைப் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்திடம் தொலைபேசி வாயிலாக பேசிய மேயர் ராமகிருஷ்ணன், “வேலை பார்த்தவர்கள் வயிற்றில் அடிக்கக் கூடாது. ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லை. குழந்தைகள் கல்விக் கட்டணம் கட்ட முடியவில்லை என வேதனையோடு தூய்மைப் பணியாளர்கள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். அவர்கள் வெயிலில் சிரமத்தோடு போராடுவதை பார்த்து எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

இது போன்ற ஏழைகளுக்கு நல்லது செய்வதற்காகவே தமிழக முதலமைச்சர் ஆட்சி நடத்தி வருகிறார். எனவே, அவரது ஆட்சிக்கு நல்ல பெயர் வேண்டும் என்பதற்காகவும், தூய்மைப் பணியாளரின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிக் கொடுத்தேன். மக்களுக்கு வேலை செய்வதற்காக தான் இந்த பதவிக்கு வந்துள்ளேன். எனவே, அவர்கள் கோரிக்கை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கவுன்சிலர்கள்.. சவால்களை சமாளிப்பாரா நெல்லையின் சைக்கிள் மேயர்? - Tirunelveli Mayor Ramakrishnan

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.