ETV Bharat / state

நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி அறிவிப்பு.. சிம்லா முத்துச்சோழன் மாற்றப்பட்டதன் பின்னணி என்ன? - AIADMK Nellai Candidate change - AIADMK NELLAI CANDIDATE CHANGE

Nellai ADMK Candidate Change: திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக சிம்லா முத்துச்சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வேட்பாளரை மாற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 6:13 PM IST

Updated : Mar 23, 2024, 9:20 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக சிம்லா முத்துச்சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வேட்பாளரை மாற்றி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஜான்சி ராணி நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் வழக்கறிஞர் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. முன்னாள் திமுக பெண் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகளான சிம்லா முத்துச்சோழன், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்விமாகக் கொண்டவர்.

அதேநேரம், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து, சிம்லா முத்துச்சோழன் திமுக சார்பில் போட்டியிட்டார். திமுகவில் தீவிரமாக பணியாற்றிய சிம்லா முத்துச்சோழன், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் அதிமுகவில் இணைந்தார்.

எனவே, தங்கள் கட்சித் தலைவியை எதிர்த்து போட்டியிட்ட ஒருவருக்கு, கட்சியில் சேர்ந்த சில நாட்களில் தேர்தலில் போட்டியிட எப்படி வாய்ப்பு வழங்கலாம் என சிம்லா முத்துச்சோழனுக்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, நெல்லை தொகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சிம்லா முத்துச்சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்தனர்.

வெளியூர்காரர் என்பதால் தொகுதிக்கு எந்த ஒரு அறிமுகமும் இல்லை, மறுபுறம் தங்கள் கட்சித் தலைவியை எதிர்த்து போட்டியிட்டவர் என பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், சிம்லா முத்துச்சோழனுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற அதிமுக நிர்வாகிகள் தயக்கம் காட்டிதாக கூறப்பட்டது. எனவே, நெல்லை அதிமுக வேட்பாளர் எந்த நேரமும் மாற்றப்படலாம் என பரபரப்பாக பேசப்பட்ட சூழ்நிலையில், இன்று அதிரடியாக நெல்லை தொகுதி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

அதன்படி, சிம்லா முத்துச்சோழனுக்கு பதில், நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஜான்சி ராணி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜான்சி ராணி, தற்போது திசையன்விளை பேரூராட்சித் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் அதிமுகவில் புறநகர் மாவட்ட இணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த வேட்பாளர் மாற்றத்தால் நெல்லை அதிமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை வேட்பாளர் மாற்றப்பட்டதன் பின்னணி என்ன? சிம்லா முத்துச்சோழன், நெல்லை தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், நெல்லையச் சேர்ந்த பல்வேறு அதிமுக நிர்வாகிகள், தொடர்ச்சியாக கட்சித் தலைமைக்கு புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தொகுதிக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத நபர் என்பதால், அவரை வைத்து பிரச்சாரம் செய்வதிலும் சிக்கல் இருப்பதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, வேட்பாளரை மாற்ற முடிவெடுத்த எடப்பாடி பழனிசாமி, யாரை புதிதாக நியமிக்கலாம் என நிர்வாகிகள் உடன் ஆலோசித்துள்ளார்.

அப்போது ஏற்கனவே சீட் கேட்டு விண்ணப்பித்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சௌந்தரராஜனை நியமிக்கும்படி சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால், அதிமுக உறுப்பினர் பட்டியலில் பெண்களுக்கு மிகக் குறைவாக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதால், நிச்சயம் நெல்லை தொகுதியில் பெண் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பெயரிலேயே, ஜான்சி ராணி தற்போது வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவருக்கு அதிமுகவில் எம்பி சீட்.. யார் இந்த சிம்லா முத்துச்சோழன்?

Last Updated : Mar 23, 2024, 9:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.