ETV Bharat / state

குமரி, நெல்லையில் நில அதிர்வு? - ஆட்சியரின் விளக்கம் என்ன? - Earth Quake in Kanyakumari

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 4:42 PM IST

Earth Quake in Kanyakumari: கன்னியாகுமரியில் நேற்று இரவு வடக்கு குண்டல், சாமிநாதபுரம் ஆகிய ஊர்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும், சில விநாடிகள் மட்டுமே இந்த நில அதிர்வு இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கோப்பு படம்
கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கன்னியாகுமரி: உலக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து செல்வதால் எப்போதும் குமரி பரபரப்பாக காணப்படும்.

பொதுமக்களின் கருத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், முக்கடல் சங்கமிக்கும் கடலோரப் பகுதிகளான கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு குண்டல், சாமிநாதபுரம், சர்ச் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நில அதிர்வு சில விநாடிகள் மட்டுமே உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்த தகவல் பரவிய நிலையில், அப்பகுதிகளில் வருவாய்த் துறையினரும், கன்னியாகுமரி போலீசாரும் விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்ட அதே நேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தின் கூடங்குளம், கூட்டப்புளி உள்ளிட்ட குமரி மாவட்ட எல்லையோர பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியினர் கூறும் போது, “நாங்கள் வீட்டில் இருந்த பொழுது திடீரென லேசான குலுக்கல் இருந்தது. அந்த குலுக்கல் சில வினாடிகள் வரை இருந்தது. முதலில் இடி மின்னல் என்று நினைத்து வெளியே வந்தால் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து உள்ளனர்” என்று தெரிவித்து உள்ளனர். ஆனால், இதுவரை குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

அதேநேரம், திருநெல்வேலி மற்றும் நெல்லை - கன்னியாகுமரி எல்லையில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுவது வதந்தியே என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளியின் ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து.. பதைபதைக்க வைக்கும் வீடியோ! - Mayiladuthurai Bike Accident CCTV

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.