ETV Bharat / state

.ரயில் நிலையத்தில் நிற்காமல் வேகமாக சென்ற ரயில் ரிவர்ஸில் வந்ததால் பரபரப்பு! - THOOTHUKUDI TRAIN REVERSE ISSUE

திருநெல்வேலி - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் இன்று காலை ஸ்ரீவைகுண்டம் அருகே தாதன்குளம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற நிலையில், மீண்டும் பின்நோக்கி வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ரிவர்ஸில் வந்த ரயில்
ரிவர்ஸில் வந்த ரயில் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2024, 10:29 PM IST

தூத்துக்குடி: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு பாசஞ்சர் ரயில் இன்று காலை 7.50க்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் ரயில் நிலையம் வழியாக திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் தாதன்குளத்தில் நின்று செல்ல வேண்டிய இந்த ரயில் நிற்காமல் சென்றுள்ளது.

இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர் மீண்டும் ரயிலை பின்னோக்கி கொண்டு வந்துள்ளார். இதனால் ரயில் மீண்டும் தாதன்குளம் ரயில் மேடைக்கு வந்துள்ளது. இதை அங்கு நின்ற ரயில் பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

ரயில் ரிவர்ஸில் வந்த வீடியோ காட்சி (Credits- ETV Bharat Tamil Nadu)

ஏற்கனவே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் இருந்து கிளம்பிய பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் கச்சனாவிளை ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற காரணத்தினால் மீண்டும் பின்னோக்கி வந்தது. இந்த காட்சிகள் அடிப்படையில் ரயில் ஓட்டுநர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், அதே போன்று இன்று நடந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி: உதகை மலை ரயில் 2 நாட்களுக்கு ரத்து! - UDHAGAI TRAIN CANCELLED

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.