ETV Bharat / state

திருப்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கைவரிசை.. சிறுவன் உட்பட 3 பேர் கைது! - ROBBERY ARREST

திருப்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை சரமாரியாக தாக்கிவிட்டு, இரண்டரை சவரன் தங்கநகையை பறித்துச் சென்ற 16 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள்
கைது செய்யப்பட்ட நபர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 12:28 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை செல்போன் சார்ஜர் ஒயரால் கை கால்களை கட்டி சரமாரியாகத் தாக்கி விட்டு, இரண்டரை சவரன் தங்க நகை பறித்துச் சென்ற சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், தோரணம்பதி அடுத்த தாதகுள்ளனூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மனைவி விஜயலட்சுமி (64). இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில், இருவரும் தனித்தனியே வெளியூரில் வேலை செய்து வருகின்றனர். அதில், வீரமணி புதிதாக கட்டி வரும் வீட்டின் கட்டட வேலையை பார்க்கச் சென்றுள்ளார்.

தங்க நகை கொள்ளை: மேலும், விஜயலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் வளர்க்கக்கூடிய பறவைகளை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த 3 பேர், விஜயலட்சுமியின் வீட்டை தட்டி "தங்களுக்கு பறவை வேண்டும் கதவைத் திறங்கள்" என கேட்டதாகவும், அதற்கு "தற்போது பறவையை நான் விற்பதில்லை, ஆகையால் நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள்" எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்த மூன்று பேரும் கதவைத் திறங்கள் உங்களிடம் பேச வேண்டும் எனக் கூறியதாகவும், அதனைக் கேட்டு கதவைத் திறந்த விஜயலட்சுமியின் கை கால்களை மொபைல் போனின் சார்ஜர் ஒயரால் கட்டி வைத்து, தலையில் பலமாக தாக்கியதாகவும், பின்னர் கழுத்தில் கிடந்த இரண்டரை சவரன் தங்க நகையை பறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

தனிப்படை அமைப்பு: அதனைத் தொடர்ந்து, வீட்டில் ரத்த வெள்ளத்தில் மிதந்த விஜயலட்சுமியை மீட்ட உறவினர்கள் அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் தனிப்படை போலீசார் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் மூதாட்டி வைத்திருந்த செல்போன் திருடிச் சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, சிசிடிவி காட்சி மற்றும் செல்போன் டவர் லொகேஷனை வைத்து போலீசார் கந்திலி அருகே தீவிரமாக தேடி வந்தனர்.

இதையும் படிங்க: பள்ளிப்பட்டு-தொண்டைமானூர் மேம்பாலம் சேதம் அடைந்தது ஏன்?-எதிர்க்கட்சித்தலைவர் எட்பபாடி பழனிசாமி சொல்லும் காரணம்!

3 பேர் கைது: இந்த நிலையில், கெஜல்நாயக்கன்பட்டி புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (19), ஆகாஷ் (21) மற்றும் ஒரு 16 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திருட்டு நடந்த வீட்டில் போலீசார் விசாரணை மேற்கொண்ட காட்சி
திருட்டு நடந்த வீட்டில் போலீசார் விசாரணை மேற்கொண்ட காட்சி (ETV Bharat Tamil Nadu)

அதில், தேவேந்திரன் என்பவர் வீரமணி என்பவர் புதிதாகக் கட்டி வரும் கட்டடத்தில் மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளார் எனவும், இவர்கள் வீட்டில் பணம் மற்றும் நகைகள் இருப்பதை அறிந்த அவர் கொள்ளையடிக்கும் திட்டம் தீட்டி அவரது நண்பர்களை அழைத்துக் கொண்டு கடந்த கடந்த மாதம் 28 ஆம் தேதி வீட்டுக்குச் சென்று மூதாட்டியை தாக்கி நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 3 பேரையும் கிராமிய காவல்நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்த செல்போன் மற்றும் இரண்டரை சவரன் தங்க நகை அவரை தாக்கப் பயன்படுத்திய கத்தி, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்த கிராமிய காவல்துறையினர் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.