ETV Bharat / state

பாலியல் தொழிலில் ஈடுபட்டவரை கடத்திய காவலர்கள்.. திருப்பூர் எஸ்பி அதிரடி நடவடிக்கை! - Tiruppur Sexual work issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 5:10 PM IST

Police Kidnap prostitutes Case: பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் கணவரை கடத்தி 1 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 3 காவலர்களையும் காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

நல்லூர் காவல் நிலையம் பதாகை
நல்லூர் காவல் நிலையம் (Credits- ETV Bharat Tamil Nadu)

திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் சாலையில் வசித்து வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும், இது குறித்து அவரது மனைவியின் புகைப்படத்தையும் அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் .

இந்நிலையில், பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் வாடிக்கையாளர் போல அணுகிய சிலர், அவரது வீட்டிற்குச் சென்று அங்கு பாலியல் தொழில் நடைபெறுவதை உறுதி செய்தனர். பின்னர் சீருடை அணிந்த 3 காவலர்களும் அங்கே வந்து, பெண்ணின் கணவரை தாக்கி, அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு, 1 லட்சம் பணம் கேட்டு காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தனது கணவரை மீட்கச் சென்றுள்ளார். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பதட்டத்துடன் சென்ற பெண்ணை நிறுத்தி விசாரித்த பொழுது, போலீசார் தனது கணவரை அழைத்துச் சென்றது குறித்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பெண்ணின் கணவர் செல்போன் எண்ணைக் கொண்டு தேடியதில், அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார், தனியார் தங்கும் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் கணவரை மீட்டனர்.

மேலும், அவருடன் திருச்சி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு நபர்களையும் கடத்தி வைக்கப்பட்டதையும் கண்டறிந்து, அவர்களையும் மீட்டனர். ஆட்களை கடத்திய வழக்கில் திருப்பூர் ஆயுதப்படை காவலர்கள் கோபால்ராஜ் (33), சோமசுந்தரம் (33), நீலகிரி சோலூர் மாவட்ட காவல் நிலைய காவலர் லட்சுமணன் (32) மற்றும் இவர்களுக்கு உதவி செய்த ஜெயராமன் (20), ஹரீஷ் (25), அருண்குமார் (24) என 6 பேரை நல்லூர் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் மூன்று பேரும் ஆயுதப்படையில் ஒன்றாக பணியாற்றி வந்ததும், பின்னர் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட போதும், தொடர்ந்து ஒன்றாக பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. அதனால் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து, இதுபோல கடத்தி பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது.

இவர்கள் மேலும் பலரிடம் இதுபோல கடத்தி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நீலகிரி காவல் கண்காணிப்பாளர் காவலர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ரேசன் அரிசி கடத்தலுக்கு சேலம் போலீசார் துணை போவதாக பாமக குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.