சென்னை: சென்னை காசிமேடு பகுதியில் 17 வயதான சிறுவன் கஞ்சாவை பற்றவைத்து புகைத்து, சக நண்பர்களோடு சேர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து ஆபாசமாக திட்டியபடி கையில் கத்தியுடன் சிறுவனை மிரட்டி தாக்கியுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் காசிமேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், காசிமேடு N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் தனது மகனை, 3 நபர்கள் சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கிய வீடியோவை ஊடகங்களில் பார்த்ததாகவும், தனது மகனை மிரட்டி தாக்கிய 3 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா (BNS Act), சிறார் நீதி சட்டம் (JJ Act), போதை மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம் (NDPS - Narcotics drugs and Psychotropic Substances act 1985) மற்றும் ஆயுத சட்டம் (Arms Act) ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவர் ஒருவர் மற்றும் 16 வயது சிறுவர்கள் இருவர் என 3 இளஞ்சிறார்களை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்தனர்.
அவர்களை பிடித்து விசாரணையில் செய்ததில், சுமார் 1 மாதத்திற்கு முன்னர் 3 சிறுவர்களும் சேர்ந்து, அந்த சிறுவனை கத்தியைக் காட்டி மிரட்டியும், தகாத வார்த்தைகளால் பேசியும், கத்தியை திருப்பி பிடித்து தாக்கி பொருட்களை வாங்கி வரச் சொல்லியும், இது பற்றி வெளியே சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது. மேலும் பிடிபட்ட 2 சிறூவர்கள் மீது தலா 2 திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிடிபட்ட 3 இளஞ்சிறார்களும் விசாரணைக்குப் பின்னர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோவையில் இளைஞரை துரத்திச் சென்று கொன்ற யானை.. இணையத்தில் பரவும் வீடியோ! - Elephant Attack in Coimbatore