ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவால் ஒருவர் அடித்துக் கொலை.. மூவர் கைது - ராணிப்பேட்டையில் நடந்தது என்ன? - RANIPET HOTEL staff MURDER

RANIPET MURDER: திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட முன்விரோதத்தால் அரக்கோணம் அருகே உள்ள பண்ணையின் மேற்பார்வையாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 5:27 PM IST

Updated : Jul 16, 2024, 5:47 PM IST

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த ஓச்சலம் பகுதியில் 50 ஏக்கர் பண்ணை, பெரம்பூரில் இயங்கி வரும் தனியார் ஹோட்டல் உரிமையாளருக்குச் சொந்தமானது என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக சிட்டிபாபு (63) என்பவர் அந்த பண்ணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டும், கணக்காளராகவும் பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிட்டிபாபு கொலை செய்யப்பட்டதாக அரக்கோணம் கிராமிய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிட்டிபாபு உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பண்ணையில் வேலை செய்வதற்கு கூலி ஆட்களை அழைத்துவரும் சோளிங்கர் அடுத்த கூத்தம்பாக்கத்தைச் சேர்ந்த தசரதனுக்கும் சிட்டிபாபுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிய வந்தது. இந்நிலையில், போலீசார் தசரதனிடம் விசாரணை மேற்கொண்டதில், பண்ணையில் வேலைக்கு வரும் அதே பகுதியைச் சேர்ந்த கிரிஜா (28) என்பவருடன் சிட்டிபாபு மற்றும் தசரதன் ஆகிய இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கிரிஜா தசரதனின் உறவுக்காரப் பெண் என்பதால், சிட்டிபாபு மற்றும் தசரதன் ஆகியோருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பண்ணையில் குடிபோதையில் இருந்த சிட்டிபாபுவை முன்விரோதம் காரணமாக தசரதன் இரும்புக் கம்பி மற்றும் சுத்தியல் மூலம் சிட்டிபாபுவை அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதற்கு அங்கு பணியுரியும் டிரைவர் கண்ணதாசனும் உடந்தை எனவும் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஜேசிபி டிரைவரான ரவியும் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த அரக்கோணம் கிராமிய போலீசார் கொலையில் சம்பந்தப்பட்ட தசரதன், கண்ணதாசன், ரவி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலை; நினைவேந்தல் பேரணிக்கு பா.ரஞ்சித் அழைப்பு! - Armstrong Murder issue

Last Updated : Jul 16, 2024, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.