ETV Bharat / state

ஆடி பெளர்ணமி: சதுரகிரி மலை ஏற குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்! - Sathuragiri Hills

Sathuragiri Hills: ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சதுரகிரி மலை ஏற குவிந்த பக்தர்கள்
சதுரகிரி மலை ஏற குவிந்த பக்தர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu))
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 12:47 PM IST

விருதுநகர்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படும் நிலையில், இது சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது.

சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu))

இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். சதுரகிரி கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர்.

அதையடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை,பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே மக்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆடி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு கடந்த 19 ஆம் தேதி முதல் நாளை 22 ஆம் தேதி வரை என 4 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல வனத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழை ஏதும் பெய்யாததன் காரணமாக ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கோயில் அடிவாரப் பகுதியில் குவிந்த பக்தர்கள் காலை 6:30 மணிக்கு கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu))

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "இந்தியாவிலேயே அதிக அரசு பேருந்துகள் இயக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு" - அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்! - minister sivasankar

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.