ETV Bharat / state

தொப்பூரில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து...3 பேர் உயிரிழப்பு! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்! - தொப்பூர் கணவாய்

தொப்பூர் இரட்டை பாலம் அருகே 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட கோர விபத்தில் மூன்று பேர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

thoppur accident
தொப்பூர் விபத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 7:37 PM IST

Updated : Jan 26, 2024, 2:20 PM IST

தொப்பூர் விபத்து

தருமபுரி : தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துகுள்ளானது. பாலத்தின் மீது லாரி, 2 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து நொறுங்கியது. கார்கள் முழுவதும் தீயில் எரிந்து தேசமடைந்துள்ளன.

இந்த கோர விபத்தால் சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் லாரி மற்றும் கார் தீப்பிடித்து எரிந்ததில் இதுவரை 3 பேரின் சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு லாரி மற்றும் மூன்று கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று மீட்டுப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த கோர விபத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ள நிலையில் அதை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். காரில் தீப்பிடித்து எரிந்ததில் கருகிய நிலையில் மூன்று உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இறந்தவர்களின் விபரங்கள் முழுமையாக தெரியவில்லை எனக் கூறப்படும் நிலையில் மீட்பு பணிகள் முடிந்த பின்னர் முழுமையான தகவல்கள் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாக படையெடுத்து வரும் பக்தர்கள்!

Last Updated : Jan 26, 2024, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.