ETV Bharat / state

குலசை தசரா: கேட்ட வரம் அருளும் முத்தாரம்மன்.. விரத முறைகளும் வேடங்களின் பலன்களும்! - KULASAI DASARA

கடற்கரை கிராமமான குலசேகரன்பட்டினத்தில் 'குலசை தசரா' எவ்வாறு கொண்டாடப்படுகிறது, பக்தர்கள் வேடமணிவதற்கான நோக்கங்கள் என்ன ? இதற்கான விரத முறைகளும், வேடங்களின் பலன்களும் குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் காண்போம்.

குலசை தசராவில் வேடமணிந்து உள்ள பக்தர்கள்
குலசை தசராவில் வேடமணிந்து உள்ள பக்தர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 11:04 PM IST

தூத்துக்குடி: மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தென் மாவட்டத்தை பொறுத்தவரை 'நவராத்திரி' என்றாலே குலசேகரன்பட்டினம்தான். இதனை சுருக்கி 'குலசை' என்பர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, தூத்துக்குடி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்தும் வருகை தரும் லட்சக் கணக்கான பக்தர்கள் 10 நாள்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

குலசை தசரா திருவிழா (Credits - ETV Bharat Tamilnadu)

முத்தாரம்மன் கோயில்: இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும், அம்பிகை முத்தாரம்மனும் வீற்றிருக்கிறார்கள். அதாவது, பாண்டியநாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் குலசேகரன்பட்டினம் என அழைக்கப்பட்டதாக வரலாறு உண்டு.

இந்த முத்தாரம்மன் கோயிலானது சாதாரண ஒரு தெருக்கோயிலாக இருந்து வந்தது. ஆனால் இன்று பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகவும், சிறப்பு பெற்று வளர்ச்சி பெற காரணம் அம்பாளின் மீதுள்ள பக்தர்களின் அளவு கடந்த நம்பிக்கைதான். முன்னர், அம்மை நோய் குணமாக வேண்டி மட்டுமே அம்மனுக்கு விரதம் மேற்கொள்வர்.

ஆனால் இப்போது கடன், வியாபார முடக்கம், வழக்கு பிரச்சினை, என சகல துன்பங்களையும் நீக்கி வரமருள்வதால் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனின் அருளைப் பெறப் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்காண்டு லட்சக் கணக்கில் அதிகரித்துக்கொண்டே வருகிறது இக்கோயில் கிராமத்துக் கோயிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் அருள் பெரும் சக்தி தலமாகவே விளங்கி வருகிறது.

வேடமணித்துள்ள பக்தர்
வேடமணித்துள்ள பக்தர் (Credits - ETV Bharat Tamil Nadu)

குலசை தசரா திருவிழா: ஆண்டு தோறும் நவராத்திரி நாளில் தொடங்கும் இத்திருவிழா, பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் அதேபோல் திருவிழா கடந்த 03 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களுக்கு பல்வேறு வேடங்கள் அணிந்து தர்மம் எடுத்து வருகின்றனர்.

தசரா குழுவினர்: இந்தநிலையில், தூத்துக்குடியை அடுத்த முத்தையாபுரம் பகுதியில் குடிசை அமைத்து முத்தாரம்மனுக்கு வருடந்தோறும் மாலையிட்டு செல்லும் 'பத்திரகாளி தசரா குழுவினர்' நாம் சந்தித்தோம். இந்த தசரா குழுவினர் காளி பறை என்று சொல்லக்கூடிய குடிசை அமைத்து, அம்மனுக்கு வேடம் கட்ட ஆயத்தமாகிக் கொண்டு இருந்தனர்.

வேடமணித்துள்ள பக்தர்கள்
வேடமணித்துள்ள பக்தர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20க்கும் மேற்பட்டோர் அவரவர்கள் வேண்டுதலுக்கேற்ப குறவன், குறத்தி, சிவன், கிழவி, பிச்சைக்காரன், சுடுகாட்டு காளி, அட்டை காளி, வெக்காளி, மயான காளி, என பல்வேறு வேடங்களை அணிந்து தத்ரூபமாகக் காட்சியளித்தனர். பின்னர், மேள, தாளங்கள் முழங்க அம்மனுக்கு பூஜை செய்து விட்டு அங்கிருந்து வீடு, வீடாக சென்று தர்மம் எடுக்க ஆயத்தமானார்கள்.

இதையும் படிங்க: 170க்கும் மேற்பட்ட விதை.. விவசாயிடம் இயற்கை வேளாண் கற்கும் கல்லூரி மாணவிகள்!

பொதுமக்கள் தர்மம்: பக்தி சிறத்தையோடும், மகிழ்ச்சியோடும் தெருக்களில் வலம் வந்த தசரா குழுவினருக்கு, அங்கிருந்த பொது மக்கள் மனமகிழ்ச்சியுடன் பணம் காணிக்கையாக வழங்குவதைக் கண் கூடாகப் பார்க்க முடிந்தது. அதாவது, முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம் உள்ளதாம்.

இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இதனை அம்மனே நேரில் வந்து கேட்பதாகக் கருதி மக்கள் தர்மம் செய்கிறார்கள்.

குலசைக்கு பிறகுதான் மைசூர்: இது குறித்து கடந்த 24 வருடங்களாக காளி வேடம் அணியும் பக்தரான ராஜா-விடம் சில தகவல்களை கேட்டோம். அப்போது அவர் கூறுகையில்,"27 வருடங்களாக குழுவாக முத்தாரம்மனுக்கு மாலையிட்டு விரதம் இருந்து கோயிலுக்கு சென்று வருகிறோம். இதற்காக 21 நாட்கள் காளி பறை அமைத்து உணவாக ஒரு நேர விரத சாப்பாடு, அதாவது, பச்சரிசி துவையல் மட்டுமே உண்டு வருகிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு குலசேகரன்பட்டினத்தில் பக்தர்கள் மிக, மிகக் குறைவு.

ஆனால் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மைசூருக்கு அடுத்தபடியாக குலசை தசரா என்கிறார்கள். ஆனால் இனி குலசைக்கு அப்புறம் தான் மைசூர் தசரா விழா என்றார். நாளை மறுநாள் இரவு 12 மணிக்கு மேல் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெற இருக்கும் நிலையில் குலசை தசரா விழா தற்போது களைக்கட்டத் தொடங்கியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.