ETV Bharat / state

ஜியோ சிம் கார்டு விற்க தடை - திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணையதள சேவைகள் சரிவரக் கிடைக்காத காரணத்தால், அவற்றை சரிசெய்யும் வரை ஜியோ நிறுவனம் சிம் கார்டுகளை விற்கக்கூடாது என தடை விதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம், ஜியோ
திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம், ஜியோ தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat)

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட நெமிலிக்குடி ஊராட்சி வடகுளவேலி மற்றும் தென்குளவேலி கிராமங்களைச் சேர்ந்த நடனசிகாமணி, ராஜ்குமார், ஷேக் அப்துல்லா, ரமேஷ், நடராஜன், வெங்கடேஷ், கோகுல்ராஜ், மதியழகன் அனைவரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இவர்கள் திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், "வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட தங்களுடைய ஊர்களில் ஜியோ நிறுவனத்தின் செல்போன் நெட்வொர்க் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை. 4ஜி மற்றும் 5ஜி அதிவேக இணையதள சேவைகள் சரிவர கிடைப்பதில்லை.

இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், தங்களில் பலர் இணையதள சேவையை நம்பியே தொழில் மற்றும் வியாபாரம் செய்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து புகார்கள் அனுப்பியும் நெட்வொர்க் சிக்னல்களை ஜியோ நிறுவனம் மேம்படுத்தவில்லை" எனத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, பாதிப்புகள் இருந்த வண்ணமே இருந்ததால், மேற்குறிப்பிட்ட நபர்கள் கடந்த மே மாதம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: "வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு படுமோசம்" - கொந்தளித்த நடிகர் பார்த்திபன்!

தற்போது, இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மோகன்தாஸ் மற்றும் உறுப்பினர் பாலு ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், சம்பந்தப்பட்ட ஜியோ நிறுவனம் இணையதள சேவை மற்றும் இணைய வேகம் குறைவாக உள்ள வலங்கைமான் வட்டத்தில் தங்களது அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் வரை ஜியோ நிறுவனம் தங்களின் சிம் கார்டுகளை விற்பனை செய்யக் கூடாது. புகார்தாரர்கள் தங்கள் இணைப்பைப் பெற்ற தேதியிலிருந்து இன்று வரை செலுத்திய கட்டணத்தை 9% ஆண்டு வட்டியுடன் திரும்பத்தர வேண்டும்.

அதேபோன்று புகார்தாரருடைய மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக தலா ரூ.20,000 மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வீதம் 30 நாட்களுக்குள் வழங்குமாறு ஜியோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர். ஏற்கனவே தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டண உயர்வால் பெரும் பாதிப்பில் இருக்கும் பொதுமக்கள் நுகர்வோர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.