ETV Bharat / state

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி! 'தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்' - திருமாவளவன் - Thirumavalavan wons Chidambaram - THIRUMAVALAVAN WONS CHIDAMBARAM

Chidambaram Lok Sabha constituency: சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மூன்றாம் முறையாக 1,03,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வர்ணா வெற்றி சான்றிதழை, தொல்.திருமாவளவனிடம் வழங்கினார்.

Thirumavalavan
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 7:49 AM IST

அரியலூர்: 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது. இதில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 5,05,084 வாக்குகள் பெற்று 1,03,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு மூன்றாவது முறையாக பெறும் வெற்றியாகும்.

இவர் திமுக கூட்டணியில் விசிகவின் பானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வர்ணா வெற்றி சான்றிதழை, தொல்.திருமாவளவனிடம் வழங்கினார்.

பின்னர் வாக்கு எண்ணும் மைத்திற்கு வெளிய செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 'இந்திய அளவில் நானூறு இடங்களை வெல்வோம் என்று கூறிய மோடி தலைமையிலான அரசு தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இது சங்பரிவார் அமைப்பிற்கும், பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்ற போர். இந்த போரில் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இது சங்பரிவார் அமைப்புக்கும் மோடிக்கும் பின்னடைவு. இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு ஆதரவு வழங்கி, காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க உதவ வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும், தற்பொழுது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றதன் மூலம், அங்கீகாரம் பெற்ற கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு அடுத்தார் போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்வாகியுள்ளது.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: மீண்டும் சிதம்பரத்தை கைப்பற்றிய திருமாவளவன்! - Chidambaram Election Result 2024

ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான பாமக, தேமுதிக ஆகியவை அங்கீகாரத்தை இழந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுமக்களின் ஆதரவுடன் மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்வாக வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக' திருமாவளவன் கூறினார். மேலும் பேசிய அவர், 'கடந்த இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியைவிட வேற எந்த வளர்ச்சி திட்டங்களையும் என்னால் செய்ய முடியவில்லை.

தற்பொழுது காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தால், ஆளுங்கட்சி உறுப்பினர் என்ற முறையில் என்னால் முடிந்த வளர்ச்சிப் பணிகளை நாடாளுமன்ற தொகுதிக்கும், தமிழகத்திற்கும் செய்வேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருப்பேன்' என்று கூறினார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏக்கள் கா.சொ.க.கண்ணன், சிந்தனை செல்வன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 4,01,530 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 1,68,493 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி 65,589 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவினர். இதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில், விசிக சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரகாசன் 4,97,010 வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “பாஜகவில் பல தலைகள் உருளும் நிலை..” - திருமாவளவன் கடும் தாக்கு! - LOK SABHA ELECTION RESULTS 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.