ETV Bharat / state

'ஆளுநர் பதவியை ஒழிப்போம்' என தேர்தல் வாக்குறுதி - இந்தியா கூட்டணிக்கு திருமாவளவன் கோரிக்கை - திருமாவளவன் பேட்டி

Thirumavalavan: இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan
திருமாவளவன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 9:35 AM IST

திருச்சி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 'வெல்லும் சனநாயகம்' எனும் மாநாடு திருச்சி அடுத்த சிறுகனூர் பகுதியில் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று (ஜன.26) நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உட்பட இந்தியா கூட்டணியில் (INDIA Alliance) இருக்கும் 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர், மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது, “இந்த மாநாடு பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் சங்பரிவர் மற்றும் சனாதன சக்திகளுக்கு எதிரான மாநாடு. மாநாட்டின் விழா நாயகன் அரசியலமைப்பு சட்டம் தான். தலைவர்கள் ஏந்திய சுடர் ஜனநாயக சுடர். கூட்டணி கட்சியினருடன் கைக்கோர்த்து நிற்காமல் சுடர் ஏந்தி நிற்கிறோம்.

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் 10 ஆண்டுகளில் என்ன சாதித்தார்கள். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, அயல்நாட்டு வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் போடுவேன் என்று கூறினார்கள். ஆனால், அவற்றை செய்யவில்லை. அதானிக்கும், அம்பானிக்கும் சேவை செய்வதுதான் 10 ஆண்டுகளில் மோடி செய்த சாதனை.

ஏழை மக்கள் வாங்கும் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால், அம்பானி மற்றும் அதானி வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். அதானி ஏர்போர்ட், அதானி டெர்மல் என அனைத்தும் அதானி மற்றும் அம்பானியுடையது' என குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், 'ஆளுநர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். மத்திய அரசால் ஆளுநர் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் மத்திய அரசை ஆட்சி செய்யும் கட்சியால் அவர் நியமிக்கப்படுகிறார். மாநில அரசுகளைக் கலைப்பதற்கு ஆளுநரைத்தான் மத்திய அரசு பயன்படுத்துகிறது.

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் ஆளுநர் என்ற பதவி எந்த விதத்திலும் தேவையில்லை. எனவே, ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கவேண்டும் என 'இந்தியா' கூட்டணியை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

இந்தியாவில் இருக்கிறவர்கள் இந்துக்கள் அல்ல, புத்தரின் வாரிசுகள். அயோத்தி ராமர் கோயிலை முழுவதுமாக கட்டி முடிப்பதற்குள் திறக்கிறார்கள். வெல்லும் சனநாயகம் மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில் இந்திய பிரச்னைகள் அனைத்தும் உள்ளன. அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைப்பதுதான் விடுதலை சிறுத்தைகள் பேரியக்கம்.

எங்க அப்பாவின் பெயரும், தந்தை பெரியாரின் பெயரும் ராமசாமி. எங்களுக்கும் ராமர் உண்டு. அவர்தான் பெரியார். நாங்கள் ராமரை எதிர்க்கவில்லை; அவர் பெயர் கொண்டு நடத்தும் அரசியலைதான் எதிர்க்கிறோம்.
அயோத்தில் ராமர் இடத்தில் பிரதமர் மோடி கீழே விழுந்து மன்னிப்பு கேட்டார். 'நான் கோயிலை வைத்து அரசியல் செய்கிறேன், என்னை மன்னித்து விடு' என்று அவர் மைண்ட் வாய்ஸில் பேசியது எனக்கு கேட்டது.

நாட்டிற்கும், அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பிற்கும் பேராபத்து. அம்பேத்கர் எழுதிய சட்டத்தை தூக்கி எறிய நினைக்கிறார்கள். நாம் அதனை பாதுகாக்க வேண்டும். பாஜகயை விரட்ட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்” எனக் கூறினார்.

இம்மாநாட்டில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சாரியா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் ரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இதையும் படிங்க: “தமிழ்நாட்டில் பா.ஜ.க. பூஜ்யம்” "இந்தியா கூட்டணி அமைத்தார்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என வரலாறு சொல்லும்" - மு.க.ஸ்டாலின்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.