ETV Bharat / state

அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. திருவாவளவன் கூறுவது ஏன்?

Thirumavalavan: எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டிற்கு சுற்றி சுழன்று வந்தாலும், பரப்புரைகளை மேற்கொண்டாலும், தமிழ்நாட்டு மக்கள் மோடியின் வித்தையை நம்ப மாட்டார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருமாவளவன்
திருமாவளவன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 12:47 PM IST

திருமாவளவன்

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழ்நாடு வந்தார். குறிப்பாக, அவர் பல்லடத்தில் பேசியபோது, 10 ஆண்டுகளில் அவர் மக்களுக்கு செய்தது என்ன என்பது பற்றி பெரிதாக குறிப்பிடவில்லை. 10 ஆண்டுகளில் இந்த நாடு என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது, என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.

குறிப்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை விமர்சிப்பது, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்து பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் கொள்கைகளை பேசி தன்னுடைய கட்சிகளை வளர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் பண்ண முடியும் என்ற நிலைக்கு மோடி வந்து விட்டார் என்பதுதான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது.

எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்தால் அதிமுகவின் ஓட்டை பெற முடியும் என நினைக்கிறார்கள். இதன் மூலம் அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும், அதன் வாக்கு சதவீதத்தை சரி செய்ய வேண்டும் என பாஜக கணக்குப் போடுகிறது என்பதை உணர முடிகிறது.

அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை எதிர்க்கிறோம் என்ற பெயரில், பாஜகவிற்கு வாக்களிக்கக்கூடிய நிலை வந்தால், தமிழ்நாட்டிற்கு பெரிய தீங்கு விளையும். இதை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக, அதிமுக தொண்டர்கள் உணர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

தூத்துக்குடியில் பேசிய பிரதமர், தான் பிரதமர் என்பதையும், அரசு விழா என்பதையும் மறந்துவிட்டு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மேடையில் இருக்கும் போது, திமுகவை கடுமையாக விமர்சிக்கக்கூடிய உரையாகவும், ஒரு அரசியல் பிரச்சார மேடையாகவும் அதனை அவர் பயன்படுத்திக் கொண்டார்.

மக்களவையில் அவர் கடைசியாக ஆற்றிய உரையும் அப்படித்தான் இருந்தது. அவருடைய பொறுப்புக்கு அழகல்ல, எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டிற்குச் சுற்றி சுழன்று வந்தாலும், பரப்புரைகளை மேற்கொண்டாலும், தமிழ்நாட்டு மக்கள் மோடியின் வித்தையை நம்ப மாட்டார்கள்.

பாஜகவுக்கு இது பெரிய செல்வாக்கு உருவாகாது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி அடித்துச் சொல்கிறது. வருகின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், திமுக கூட்டணி 40க்கு 40 வெற்றி பெறும். தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும்.

கிராமப்புறங்களில் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில், தற்போது சென்னை பள்ளிக்கரணையில் ஆணவக் கொலை நடந்திருப்பது வருத்தமளிக்கிறது. தமிழ்நாடு அரசு இது போன்ற சாதியப் பாகுபாடுகளைக் களைந்து, இதற்கான புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் கொடுத்த விளம்பரத்தில் சீன கொடி.. திமுகவின் தேசப்பற்று குறித்து பிரதமர் விமர்சனம்.. கனிமொழி ரியாக்‌ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.