ETV Bharat / state

புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயராக திலகவதி பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயராக திலகவதி செந்தில் பதவியேற்றார். புதுக்கோட்டை மாநகராட்சியின் துணை மேயராக லியாகத் அலி பதவியேற்றுக் கொண்டார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

மேயராக பதவியேற்ற திலகவதிக்கு செங்கோல் வழங்கிய அமைச்சர் கே என் நேரு
மேயராக பதவியேற்ற திலகவதிக்கு செங்கோல் வழங்கிய அமைச்சர் கே என் நேரு (Credits - ETV Bharat Tamil Nadu)

புதுக்கோட்டை: நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இன்று புதுக்கோட்டை மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சியின் முதல் மேயராகவும், பெண் மேயராகவும் திலகவதி பதவி ஏற்றுக்கொண்டார். துணை மேயராக லியாகத் அலி பதவி எற்றார்.

அவரை தொடர்ந்து மற்ற மாமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் பங்கேற்று மாநகராட்சி மேயருக்கு, 5-1/4 அடி உயரம் கொண்ட செங்கோல், 51 பவுன் தங்கச் சங்கிலியை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து மாமன்ற கூட்ட இருக்கையில் மேயர் திலகவதி செந்திலை அமர வைத்து, கூட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். முன்னதாக புதுக்கோட்டையில் 101.34 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் , புதிய பேருந்து நிலையம் கட்ட 18.90 கோடியில் அடிக்கல் நாட்டு விழா, ஐந்து வார்டுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணிக்கு 25.31 கோடியில் அடிக்கல் நாட்டினர்.

பருவ மழையை எதிர்கொள்ள தயார்: இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் பதவியேற்பு விழாவில் 145 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், "தமிழக முழுவதும் உள்ள நகர் பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு ஆகாயத்தாமரை அகற்றப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் பருவ மழையை எதிர்கொள்ள வேண்டிய தயார் நிலையில் நகராட்சி நிர்வாகம் உள்ளது.

மழை பாதிப்புகள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கும், சேதமடைந்த மரங்களை அகற்றுவதற்கும், உணவு தயாரிப்பதற்கும் ஒரே இடங்களில் இல்லாமல் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின்: மிதிக்கட்டும்; அப்படியாவது அழுக்கேறிய மூளை சுத்தமாகட்டும்!

கடந்தாண்டு வடகிழக்கு பருவமழைக் ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என எதிர் கட்சிகள் குற்றச்சாட்டிற்குப் பல அளித்த அவர், "எதிர்க்கட்சிகள் என்றுமே நன்றாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூற மாட்டார்கள். திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் முறையாக நடந்து கொண்டிருக்கிறது.

வடகிழக்கு பருவமழை பெய்யும் போது மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் போது, அதற்குத் தேவையான உபகரணங்களும் தயாராக உள்ளது" என தெரிவித்தார். தொடர்ந்து திருநெல்வேலிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு,

"கட்சி எந்த பணி கொடுக்கிறதோ அந்த வேலையை செய்யப் போகிறேன்" என பதிலளித்தார். மேலும் "புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதால், அதனால் உயர்த்தப்படும் வரி உயர்வு ஏழை மக்களை பாதிக்காது. 1200 சதுர அடிக்கு மேல் கட்டடம் கட்டுபவர்களுக்கு மட்டும் தான் 40% வரி உயரும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.