தேனி: தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன், அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை விட 278825 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணைய இணையதள விவரம்..
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | தங்க தமிழ்செல்வன் | திமுக | 5,71,493 |
2 | டிடிவி தினகரன் | அமமுக | 2,92,668 |
3 | நாராயணசுவாமி | அதிமுக | 1,55,587 |
4 | மதன் | நாதக | 76,834 |
தேனி மக்களவைத் தொகுதியில் பிற்பகல் 3.30 நிலவரப்படி திமுக - 266779, அமமுக - 124863, அதிமுக - 72,144 மற்றும் நாம் தமிழர் கட்சி 35,683 வாக்குகளையும் பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 141916 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் இருந்தார்.
தேனி மக்களவைத் தொகுதியில் 8 ஆம் சுற்று முடிவில் திமுக - 2,20,554, அதிமுக - 57,263, அமமுக - 1,01,207, நாம் தமிழர் கட்சி - 28,950 வாக்குகளை பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 1,19,347 வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.டி நாராயணசாமி, திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பாஜக கூட்டணியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் ஜெயபால் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
2019 தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் குமார், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் பிரதான வேட்பாளராக போட்டியிட்டனர். இவர்களில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபி ரவீந்திரநாத் குமார் 5,04,813 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ். இளங்கோவன் 4,28,120 வாக்குகளும், அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர். இதில் அதிமுகவிற்கு 42.96 சதவீதமும், திமுக கூட்டணியி்ல் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு 36.44 சதவீதமும், அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு 12.26 சதவீதம் வாக்குகளும் விழுந்தன.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: தேனியில் இம்முறை வெற்றியை ருசிக்கப் போவது யார்? - Lok Sabha Election Result 2024