ETV Bharat / state

கொலை வழக்கில் 59 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை - தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

Theni Murder case: தேனி மாவட்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 59 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 11:44 AM IST

தேனி: தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர், சிவக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீட்டில் குடியிருப்பதற்காக உரிய பணம் செலுத்தி ஒத்திக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் முருகனுக்கும், சிவக்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், சிவக்குமார் வீட்டைக் காலி செய்து வேறொரு பகுதியில் குடியிருந்து வந்த நிலையில் கடந்த 14.02.2020 அன்று முருகனிடம் ஒத்திக்குக் கொடுத்தப் பணத்தைத் திரும்பிக் கேட்டதால் முருகனுக்கும், சிவக்குமாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்துள்ளது. இந்த மோதலில் வீட்டின் உரிமையாளரான முருகன் தான் வைத்திருந்த கத்தியால், சிவக்குமாரை சரமாரியாக குத்தி தாக்கியதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, சிவக்குமாரின் மனைவி செல்வராணி ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று (பிப்.26) நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவு பெற்ற நிலையில், சாட்சியங்களின் அடிப்படையில் சிவக்குமாரை கொலை செய்த குற்றத்திற்காக முருகன்(59) என்ற முதியவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகையை கட்டத் தவறினால், மேலும் ஆறு மாத கால மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றவாளியை காவல்துறையினர் பாதுகாப்புடன் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: "எலான் மஸ்குக்கு கிடைக்காத குலசேகரன்பட்டினம்" விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.