ETV Bharat / state

தேனியில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!

Theni Additional Sessions Court Order: கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையுடன், ஏழு ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
தேனியில் கடனை திருப்பி கெட்ட பெண் கொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 1:48 PM IST

தேனி: தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்தவர் சரணமணி (40) என்ற பெண். கேரளா மாநிலத்திற்கு தோட்ட பணிக்குச் செல்லும் இவருக்கு பணியிடத்தில் தேவாரம் பகுதியை சேர்ந்த சடையாண்டி (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் ஒன்றாக தோட்ட பணிகளுக்குச் சென்று வந்திருந்த நிலையில், சடையாண்டி தனது தேவைக்காக சரணமணியிடம் ரூ.40 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். கடன் பெற்று நீண்ட நாட்களாக பணத்தை திருப்பிக் கொடுக்காததால் சரணமணிக்கும், சடையாண்டிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த சடையாண்டி, கடந்த 2018 ஆம் ஆண்டு சரணமணியின் இல்லத்திற்குச் சென்று அவரை தலையணையை கொண்டு அழுத்தி கொலை செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்த சுமார் 9 சவரன் தங்க நகைகளையும் திருடி தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், இது குறித்து உயிரிழந்த சரணமணியின் சகோதரி தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை செய்த தேவாரம் போலீசார், சரணமணியை கொலை செய்த சடையாண்டி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கானது தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நேற்று (ஜன.24) நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் , “ கடன் கொடுத்த சரணமணியை கொலை செய்த சடையாண்டிக்கு ஆயுள் தண்டனையுடன் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம்” விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:தொப்பூரில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து...3 பேர் உயிரிழப்பு! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.