ETV Bharat / state

உண்டியல் பணம் கையாடல்; தூத்துக்குடி தலைமை பெண் காவலர் அதிரடியாக சஸ்பெண்ட்..! - WOMAN HEAD CONSTABLE SUSPENDED

தென்காசி சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை பணத்தை கையாடல் செய்த தலைமை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பெண் காவலர் உட்பட கைதான நான்கு பெண்கள்
பெண் காவலர் உட்பட கைதான நான்கு பெண்கள் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2024, 10:19 AM IST

தென்காசி: தென்காசியின் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும்போது கையாடல் செய்த தலைமை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த சிவ ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையானது தன்னார்வ அமைப்புகள் மூலம் ஒவ்வொரு மாதமும் 20-ந் தேதிக்கு மேல் எண்ணப்படுவது வழக்கம். உண்டியல் எண்ணும் பணிகள் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி சங்கரநாராயண சுவாமி கோவிலில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் நான்கு பேர் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து புறக்காவல் நிலைய போலீசார், சந்தேகத்திற்கு இடமான அந்த நான்கு பெண்களை பிடித்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மகளிர் காவலர்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதில் ஒருவர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் மகேஸ்வரி (42) என்பது தெரிய வந்தது.

இதையும் படிங்க: சென்னையில் புதிதாக 41 குளங்கள்; வெள்ள பாதிப்பை தடுக்க முயற்சி!

அவருடன் சிக்கியவர்கள் சங்கரன்கோவில் அருகே உள்ள கோ. மருதப்பபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி (65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) ஆகியோர் என்பதும், 4 பேரும் ஒன்றாக இணைந்து உண்டியல் பணம் எண்ணும் போது 17 ஆயிரத்து 710- ரூபாய் திருடியதும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் உண்டியல், பணம் திருட்டில் ஈடுபட்ட தலைமை காவலர் மற்றும் மூன்று பெண்களை கைது செய்தனர்.

இந்த நிலையில், சங்கரநாராயண சுவாமி கோவில் உண்டியல் பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் தலைமை காவலர் மகேஸ்வரியை (42) தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.