ETV Bharat / state

நெல்லை கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயில் பங்குனி தேர் திருவிழா.. விண்ணைப் பிளந்த பக்தர்களின் கோவிந்தா கோஷம்.. - Nellai Kariyamanikka Perumal temple - NELLAI KARIYAMANIKKA PERUMAL TEMPLE

Nellai Kariyamanikka Perumal Temple: நெல்லை கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற பங்குனி தேர்த் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளக்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Nellai Kariyamanikka Perumal temple
Panguni festival held at Nellai Kariyamanikka Perumal temple
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 7:26 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் டவுண் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோவில். இந்த திருக்கோயிலில் மூலவராக அருள்மிகு காியமாணிக்கப் பெருமாள் மற்றும் தாயார்கள் ஸ்ரீ சௌந்தரவல்லி ஸ்ரீ கோதைவல்லி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

ராஜராஜ சோழ மன்னனுக்கு காியமாணிக்கன் என்ற சிறப்பு பெயர் உண்டு. அவர் காலத்தில் கட்டப்பட்ட இந்த திருத்தலம் வைகானசம் ஆகம முறைப்படி பூஜைகள், விழாக்கள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் நின்ற திருக்கோலத்திலும், கருட மண்டபத்தில் அருள்மிகு அனந்தபத்மநாபர் என பள்ளிகொண்ட திருக்கோலத்திலும். பிரகாரத்தில் அருள்மிகு லெட்சுமி நாராயணர் என்று வீற்றிருந்த திருக்கோலத்திலும் என மூன்று நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கின்றார்.

இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா கோலாகலமாகவும், வெகு விமரிசையாகவும் இன்று (ஏப்.11) நடைபெற்றது. கடந்த 2ஆம் தேதி காலை கொடியேற்றம் வைகானசம் முறைப்படி நடைபெற்றது.

திருவிழா நாட்களில் காலை திருமஞ்சனமும், இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான தேர்த் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.11) அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத நீலமணிநாதா் பெருமாள் தேருக்கு எழுந்தருளினார்.

காலை 7.00 இருந்து 7.30 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரதவீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது.

மேலும், நாளை (ஏப்.12) காலை குறுக்குத்துறை தாமிரபரணி நதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நீலமணிநாதருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. இந்த விழா ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் சிறப்பாகச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தஞ்சாவூரில் விவசாயிக்கு ஆதரவாக மலைவாழ் பெண் விவசாயிகள் தேர்தல் பிரச்சாரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.