ETV Bharat / state

கோவில்பட்டி சிறுவன் மரண வழக்கில் ஆறு நாட்களாக நீடிக்கும் மர்மம்.. உறவினர்கள் சாலை மறியல்..! - THOOTHUKUDI BOY DEATH CASE

கோவில்பட்டியில் பத்து வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்து ஆறு நாட்களுக்கு மேலாகியும் ‌போலீசார் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என்பதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் சாலை மறியல்
உறவினர்கள் சாலை மறியல் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதி. இவர்களது இளைய மகன் கருப்பசாமி அங்குள்ள நகராட்சி பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை காலையில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட, தனியாக இருந்த கருப்பசாமி திடீரென மாயமாகியுள்ளான்.

பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் சிறுவன் வீடு அருகே இருந்த பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக கன்னெடுக்கப்பட்டான். மர்மமான முறையில் சிறுவன் உயிரிழந்து நான்கு நாட்களாகியும், போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவன் மர்ம மரணம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரடி மேற்பார்வையில் 2 ஏடிஎஸ்பிக்கள், 4 டிஎஸ்பிக்கள் என மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், சிறுவன் மர்ம மரணம் குறித்து குற்றத்தை ஒத்துக் கொள்ள சொல்லி போலீசார் கட்டாயப்படுத்துவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரிசார்ட்டில் மாயமான மணப்பெண் நகைகள்.., பெண்ணுக்கு திருநங்கை பாலியல் தொல்லை.. சென்னை க்ரைம்..!

தூத்துக்குடி, நெல்லை என போலீசார் இணைந்து பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்ட போதிலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் அந்த பகுதியை சேர்ந்த மக்களை குற்றத்தை ஒத்துக்கொள்ளுங்கள் என்று கூறி தொடர்ந்து அடித்து மிரட்டி வருவதாக ‌ குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி மெயின் ரோட்டில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மறியல் செய்ய முயன்ற சிறுவனின் பெற்றோர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்ட சிறுவனின் குடும்பத்தார், '' ஊர் மக்களை ஏன் விசாரணை என்ற பெயரில் கொடுமை படுத்துகிறீர்கள்? ரத்த பரிசோதனை எடுக்க சொல்கிறீர்கள்? என்ன சாப்பிட்டோம் என்பதையெல்லாம் கேட்கிறீர்கள்? இதெல்லாம் எதற்கு?'' என ஆவேசமாக போலீசாரை பார்த்து கேள்வி எழுப்பினர்.

முன்னதாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், '' சிறுவன் வழக்கில் குற்றத்தின் அம்சங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கான வாய்ப்புகள் குறித்தும் முழுமையாக விசாரிக்கப்படுகிறது. விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது மற்றும் உண்மையான குற்றவாளியை அனைத்து ஆதாரங்களுடன் கூடிய விரைவில் கைது செய்ய அனைத்து நேர்மையான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.