ETV Bharat / state

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்: மயிலாடுதுறை கோர்ட் அதிரடி உத்தரவு! - thirumavalavan mp

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 2:52 PM IST

warrant to thirumavalavan in riot case: 2003 ஆம் ஆண்டு பேரணி நடத்திய விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி-க்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

திருமாவளவன் எம்பி (கோப்புப் படம்)
திருமாவளவன் எம்பி (கோப்புப் படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக 2003-ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து, மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் பேரணி நடைபெற்றது.

அப்போது, நெ.1 காமராஜர் சாலையில் பேரணி செல்வதற்கு அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், பேரணியில் பங்கேற்றவர்கள் நெ.2 காந்திஜி சாலை வழியாக செல்ல முற்பட்டனர். அப்போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும், விசிகவினருக்கும் மோதல் உருவாகியது. மேலும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மோகனவேல் அளித்த புகாரின் பேரில் பிரிவு 147, 148, 337, 307, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இதுதொடர்பாக, மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் ஆஜராகாத எம்.பி. திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.

மத்திய அரசின் 3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இந்த வழக்கு தொடர்பாக விசிக தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யாததால், பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இவ்வழக்கினை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற கணவர் மாயம்.. தூத்துக்குடியில் தவிக்கும் குடும்பம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.