ETV Bharat / state

அதிமுக - பாஜக கூட்டணி இல்லாததால்தான் தோல்வியா? - வானதி சீனிவாசன் சொல்லும் லாஜிக் இதுதான்! - NDA Consultative Meeting In Delhi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 9:46 AM IST

Updated : Jun 7, 2024, 10:46 AM IST

NDA Alliance Parties Meeting In Delhi: டெல்லியில் இன்று (ஜூன் 07) நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், வானதி சீனிவாசன், தேவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் சென்னையில் இருந்து நேற்று (ஜூன் 06) இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், வானதி சீனிவாசன்
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், வானதி சீனிவாசன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியாகின. இதில் மத்தியில் பாஜக உள்பட எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 240 தொகுதிகளை மட்டுமே பாஜகவால் கைப்பற்ற முடிந்தது.

அதேநேரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது. ஆட்சியமைக்கத் தேவையான 272க்கு அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளதால், பாஜக தலைமையிலான இக்கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

பாஜகவுக்கு தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு பறிபோனது ஒருபுறம் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும், தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜக கட்சியினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 07) டெல்லியில் நடைபெற உள்ளது.

இக்ககூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றனர். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், வானதி சீனிவாசன், தேவநாதன் ஆகிய தலைவர்கள் சென்னையில் இருந்து நேற்றிரவு (ஜூன் 06) விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

டெல்லி புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "அதிமுக தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தொண்டர்களுக்கான இயக்கமாக, வரலாற்று சிறப்புமிக்க இயக்கமாக அதிமுகவை கட்டிக் காத்து வந்தனர்.

இன்றைய சூழ்நிலையில், தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுபோல் நடப்பதுதான் நல்லது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று நினைக்கின்றனர்" என்று கூறினார்.

டிடிவி தினகரன் கூறும்போது, "தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது. எனவே கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்கிறேன். பணநாயகம் வென்றுள்ளது என்பதைத்தான் தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன" என்று தெரிவித்தார்.

வானதி சீனிவாசன் கூறும்போது, "மூன்றாவது முறை நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்கவிருப்பது வரலாற்று சாதனை. தொடர்ச்சியாக ஆட்சி நடத்துவது ஜனநாயக நாட்டில் சவாலான விஷயம். ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அந்த சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளது.

கோவை தொகுதி தேர்தல் முடிவு வருத்தத்தைத் தருகிறது. மக்கள் தீர்ப்பை ஏற்று தொடர்ந்து மக்கள் பணியை செய்ய பாஜக எங்களை தயார் செய்துள்ளது. மத்தியில் பாஜக அரசு அமைந்ததும் கோவை தொகுதியில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

தமிழ்நாடு முழுவதும் ஒரு கூட்டணிக்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக ஒரே கூட்டணியை வைத்திருப்பதால் இந்த வாக்குகள் கிடைத்துள்ளன. அதனால்தான் 40 தொகுதிகளிலும் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மாநில அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும் அதை தேர்தல் வெற்றியாக மாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது" என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “நான் பாஜகவிற்கு வர வேண்டுமென்றால் அவர்கள் பெரியார் வாழ்க என்று சொல்ல வேண்டும்” - கனிமொழி அதிரடி பேச்சு!

Last Updated : Jun 7, 2024, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.