ETV Bharat / state

"மதுவை வாங்கி வீட்டுக்கு சென்று குடியுங்கள்" - உயர் நீதிமன்ற மதுரை கிளை - tasmac bar case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 10:54 AM IST

high court madurai branch on tasmac: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களில் அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப் படுவதில்லை என கூறப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் மற்றும் மதுரை நீதிமன்றம் (கோப்புப்படம்)
டாஸ்மாக் மற்றும் மதுரை நீதிமன்றம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களில் கழிப்பறை, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப் படுவதில்லை.

அதே போன்று பார்களில் விற்கப்படும் அசைவ உணவுகள் மற்றும் உணவு பண்டங்கள் காலாவதியானதாகவும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றது. அங்கு வழங்கப்படும் தண்ணீர் பாட்டில்களும் கூடுதல் விலைக்கு விற்பதுடன் மது பிரியர்கள் குடித்து வைத்து செல்லும் பழைய குடிநீர் பாட்டில்களில் உள்ள தண்ணீரை வேறொரு பாட்டில்களில் நிரப்பி அதனையும் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பார்களுக்கு சென்று மது அருந்தும் மது பிரியர்களுக்கு இதனால் உடல் நலக்குறைவு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் பார்களில் சுகாதாரத்தை பாதுகாப்பதுடன், உணவுப் பொருட்கள் காலாவதியானது மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் , விக்டோரியா கௌரி முன்பு விசாரிக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இது போன்ற கோரிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவித்தால் மதுப்பழக்கத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். எனவே, மனுதாரர் தேவைப்பட்டால் மதுவை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து அருந்திக் கொள்ளலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.