ETV Bharat / state

முடிந்தது தீபாவளி.. சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்.. களத்தில் 23 ஆயிரம் தூய்மை பணியாளர்கள்! - CHENNAI FIRECRACKER WASTE

தீபாவளி முடிந்து சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பட்டாசு கழிவுகள் சேகரிப்பு
பட்டாசு கழிவுகள் சேகரிப்பு (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 5:12 PM IST

சென்னை: நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக சென்னையில் பட்டாசு வெடிப்பதற்கென்று காலை மற்றும் மாலையில் நேரங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலானோர் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை பொருட்படுத்தாமல் பட்டாசுகளை வெடித்திருந்தனர். சென்னையில், அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்தாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள 34 ஆயிரம் தெருக்களில் வெடித்த பட்டாசுகளின் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக அகற்றி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி தகவல்: இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், '' சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சென்னையில் தூய்மை பணிக்காக தினசரி தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இதில் பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்காக மட்டுமே நியமிக்கப்பட்ட 19,600 தூய்மை பணியாளர்கள் உள்பட மொத்தம் 23 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக பட்டாசு கழிவுகளை அகற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணிக்கு லாபம்'.. என்ன சொல்கிறார் செல்வப்பெருந்தகை..?

இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 156 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டது. இதில் ஒரு மண்டலத்துக்கு இரண்டு வாகனங்கள் என 30 வாகனங்களில் பட்டாசு கழிவுகளை சேகரித்து கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகழிவு அகற்றும் ஆலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்படுகிறது.

அந்த வகையில் மண்டல வாரியாக அகற்றப்பட்ட பட்டாசு கழிவுகள், இதில் மண்டலம் 1ல் 14.45 டன்னும், மண்டலம் 2ல் 6.15 டன்னும், மண்டலம் 3ல் 11.39 டன்னும், மண்டலம் 4ல் 10.87 டன்னும், மண்டலம் 5ல் 7.65 டன்னும், மண்டலம் 6ல் 10.08 டன்னும், மண்டலம் 7ல் 09.77 டன்னும், மண்டலம் 8ல் 18.50 டன்னும், மண்டலம் 9ல் 10 டன்னும், மண்டலம் 10ல் 13 டன்னும், மண்டலம் 11ல் 8.57 டன்னும், மண்டலம் 12ல் 12.03 டன்னும் மண்டலம் 13ல் 5.66 டன்னும், மண்டலம் 14ல் 10.99 டன்னும், மண்டலம் 15ல் 3.43 டன்னும் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டது.

அதிகபட்சமாக, மண்டலம் 8ல் 18.50 டன் பட்டசு கழிவுகளும், குறைந்தப்பட்சமாக மண்டலம் 15இல், 3.43 டன் பட்டாசு கழிவுகளும் அகற்றப்பட்டது. 15 மண்டலங்களிலும் இருந்து தற்போது வரை 156.48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.