ETV Bharat / state

மக்களவைத் தேர்தல்: தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் வெற்றி! - lok sabha election result 2024 - LOK SABHA ELECTION RESULT 2024

Tenkasi Lok Sabha election results 2024: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இந்த தேர்தலில் போட்டியிட்ட பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள் குறித்த முழு விபரத்தை காணலாம்..

தென்காசி தொகுதி வேட்பாளர்கள்
தென்காசி தொகுதி வேட்பாளர்கள் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 12:18 PM IST

Updated : Jun 4, 2024, 9:38 PM IST

தென்காசி: தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை விட 1,96,199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள விபரம்..

வ.எண்வேட்பாளர்கட்சி பெற்ற வாக்குகள்
1ராணி ஸ்ரீ குமார்திமுக4,25,679
2கிருஷ்ணசாமிஅதிமுக2,29,480
3ஜான் பாண்டியன்பாஜக2,08,825
4இசை மதிவண்ணன் நாதக1,30,335
  • 5 மணி நிலவரப்படி தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 367065 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 196197 வாக்குகளும், பாஜக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஜான் பாண்டியன் 172127 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவண்ணன் 109050 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை விட 170858 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
  • 4 மணி நிலவரப்படி, தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 309069 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 168041 வாக்குகளும், பாஜக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஜான் பாண்டியன் 147197 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவண்ணன் 91058 வாக்குகளும் பெற்றுள்ளார். தற்போது திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை விட 141028 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
  • தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 264337 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 143896 வாக்குகளும், பாஜக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஜான் பாண்டியன் 125212 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவண்ணன் 77018 வாக்குகளும் பெற்றுள்ளார். - 3.35pm நிலவரம்.

இந்தியா கூட்டணியில் இந்த முறையும் இங்கு திமுகவே களமிறங்கி உள்ளது. அக்கட்சியின் நீண்டகால உறுப்பினரும், அரசு மருத்துவருமான ராணி ஸ்ரீகுமார் திமுக சார்பில் போட்டியிடுகிறார். சங்கரன்கோவிலை சேர்ந்த இவரது கணவர் ஸ்ரீகுமார், திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிட்டுள்ளார். பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும், நாம் தமிழர் கட்சி சார்பில் மதிவாணன் என்பவரும் போட்டியிட்டுள்ளனர். இவர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 15 பேர் களத்தில் உள்ளனர்.

2019 தேர்தலில் வென்றது யார்?: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் அங்கம் வகித்த கூட்டணியில் பிரதான கட்சியான திமுக இங்கு போட்டியிட்டது. அக்கட்சியின் வேட்பாளர் தனுஷ் எம்.குமார் 4,76,156 (45%) வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட டாக்டர். கிருஷ்ணசாமி 3,55,870 (33%) வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணனுக்கு 59,445 (6%) ஓட்டுகள் விழுந்தன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: தேர்தல் 2024; தென்காசியில் வெற்றியை தக்க வைக்குமா திமுக? -Tenkasi Election Results - Lok Sabha Election Result 2024

Last Updated : Jun 4, 2024, 9:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.