ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தல்: தென்காசியிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரம்! - lok sabha election 2024

Tenkasi Parliamentary Constituency: தமிழகத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தென்காசி
தென்காசி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 6:10 PM IST

தென்காசி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்கள் வைக்கும் பணிகள், அடிப்படை வசதிகளான குடிநீர், சாமியானா பந்தல் அமைத்தல் போன்ற பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

அதில் ஒரு பகுதியாக, தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தமாக 1743 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை தென்காசி மாவட்ட தேர்தல் அதிகாரி கமல் கிஷோர் தலைமையில் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

அந்த வகையில், ராஜபாளையத்திற்கு 483 வாக்கு இயந்திரங்கள், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 827, சங்கரன்கோவிலுக்கு 922, வாசுதேவநல்லூருக்கு 604, கடையநல்லூருக்கு 489 மற்றும் தென்காசிக்கு 366 வாக்கு இயந்திரங்களும் கொண்டு செல்லப்படுகின்றன. இப்படி மொத்தமாக 3691 வாக்கு இயந்திரங்கள் 1743 வாக்குச்சாவடிகளுக்கு காவல்துறையின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தொடர் தோல்வியில் இருந்து மீளுமா மும்பை அணி.. பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரீட்சை! - Punjab Vs Mumbai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.