தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த பாபநாசம் அருகே சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அந்த 25 வயதான வாலிபர். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் சாக்லேட் கொடுத்து ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை அங்குள்ள ஒருவரின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார், அப்போது அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு அந்த வீட்டில் உள்ளவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது குளியல் அறையில் இருந்து சத்தம் வந்துள்ளது. உடனே கதவை திறந்து பார்த்தபோது அந்த இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க: மலேசியா டூ சென்னை.. விமானத்தில் வந்த அரிய வகை பச்சோந்தி, கருங்குரங்குகள்.. சிக்கியது எப்படி?
பின்னர் இது குறித்து பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் பகவதி சரணம் விசாரித்து போக்சோ வழக்கில் வாலிபரை கைது செய்தார். தொடர்ந்து தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையை காவல் ஆய்வாளர் உஷா, ஏட்டு சித்ரா ஆகியோர் துரிதப்படுத்தி சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 4,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் ஒரு லட்சம் அரசு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் சசிரேகா வாதாடினார். இந்த வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த இன்ஸ்பெக்டர்கள் பகவதி சரணம், உஷா, ஏட்டு சித்ரா ஆகியோரை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் வெகுவாக பாராட்டினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்