தருமபுரி: டாஸ்மாக் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சோதனை ஓட்டமாகத் தமிழ்நாட்டில் உள்ள நாகை, குமரி, தேனி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில், மதுபான விலையுடன் கூடுதலாக ரூ.10 பெற்றுக் கொள்ளப்படும்.
பின்னர், காலி பட்டில்கள் ஒப்படைத்துக் கூடுதலாகக் கொடுத்த ரூபாய் 10யை பெற்று கொள்ளாலாம். இத்திட்டம் நேற்று (ஜனவரி 19) முதல் தருமபுரி மாவட்டத்தில் அமலுக்கு வந்தது. இந்நிலையில், இத்திட்டத்தைச் செயல்படுத்த போதிய ஆட்கள் இல்லை. மது பாட்டிகளை வாங்கி தேக்கி வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை என கூறி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 64 மதுபான கடை ஊழியர்கள் கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்துக் கூறியதாவது, "நீதிமன்றத்தின் ஆணைப்படி பாட்டிலுக்கு ரூபாய் 10 வழங்கும் திட்டத்தைக் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த மது பாட்டில்களை வழங்குவதற்குக் கடையின் நம்பர் குறித்த ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், கலர் மார்க்கரில் அடையாளமிட வேண்டும்.
இந்த வேலையைச் செய்வதற்கு போதிய ஆள்பற்றகுறை உள்ளது. மேலும், பாட்டில்களைத் தேக்கி வைக்க இடம் வசதி இல்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என 64 மதுக்கடைகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையில், 12 மணிக்கு மதுக்கடை திறக்காததால், மதுக்கடைகளின் முன்பு மது பிரியர்கள் ஏராளமானவர்கள் கடையின் முன்பு குவிந்தனர். மேலும், மதுக்கடையை உடனடியாக திறக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, தகவல் அறிந்த மாவட்ட மேலாளர் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, 12 மணிக்குத் திறக்க வேண்டிய கடையை 2 மணிக்குத் திறந்தனர்.
ஏற்கனவே பட்டிலுக்கு விலையை விட ரூபாய் 10 அதிகமாக கடைக்காரர்கள் வாங்குகிறார்கள். இந்நிலையில், பாட்டிலுக்கு ரூபாய் 10 வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர். இதனால், கூடுதலாக ரூபாய் 20 அதிகரிப்பதாக மது பிரியர்கள் குமுறுகின்றனர்.
இதையும் படிங்க: பணிப்பெண் கொடுமை; தம்பதி மீது வழக்குப் பதிவு.. திருமாவளவன் கடும் கண்டனம் - பல்லாவரம் எம்எல்ஏ ரியாக்ஷன் என்ன?