ETV Bharat / state

“கேரள அரசு சட்டாம்பிள்ளைத்தனமாக செயல்படுகிறது” - தமிழ் தேசியப் பேரியக்கம் சாடல்! - Mullai Periyaru Dam Issue - MULLAI PERIYARU DAM ISSUE

Mullai Periyaru Dam Issue: முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் தேசிய பேரியக்கம், புதிய அணை கட்ட முற்பட்டால் இங்கிருந்து கேரளாவிற்குச் செல்லும் பொருட்களை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை மேற்கொள்வோம் என்று கூறியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய பேரியக்கத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய பேரியக்கத்தினர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 2:21 PM IST

மதுரை: கேரள அரசு முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சி செய்வதைக் கண்டித்தும், தமிழக அரசு அதற்கு துணை போவதாக குற்றம் சாட்டியும் கேரளா அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி, தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் 20க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ் தேசிய பேரியக்கத்தினர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ் தேசியப் பேரியக்கத்தின் மதுரை மாநகர செயலாளர் கதிர்நிலவன் கூறுகையில், “கேரள மாநில முதலமைச்சர் முல்லைப் பெரியாறு அணை இடிந்து விடும் அபாயத்தில் உள்ளதாகவும், அதனை இடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு புதிய அணை கட்டித்தருவோம் எனக் கூறி இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்திற்கு 2024 பிப்ரவரி மாதம் கேரளா அரசு விண்ணப்பித்துள்ளதைக் கண்டிக்கிறோம். இது குறித்து கடந்த மே 28ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி, தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். கூட்டணியில் உள்ள தமிழக முதலமைச்சர் இது பற்றி கேள்வி எழுப்பவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம், சிற்றணை உள்ள பகுதியை பலப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என கூறியுள்ள நிலையில், பழைய அணையை தகர்த்துவிட்டு புதிய அணை கட்டுவோம் என்பது கேரள முதலமைச்சரின் ஆணவப்போக்கை காட்டுகிறது.

புதிய அணை கட்ட தமிழ்நாடு அரசு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அனுமதி இருந்தால் தான் புதிய அணை கட்ட முடியும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்திய நிலையில், மூன்று அனுமதியும் இல்லாமலேயே சட்டாம்பிள்ளைத் தனமாக ஒரு தனியார் நிறுவனத்தைப் போல கேரளா அரசு செயல்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டிற்குச் சொந்தமான அணை என்பதை உணராமல் ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளீர்கள்.

புதிய அணை கட்டினால் வண்டி பெரியாறு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகும். கேரளா அரசு இடுக்கியில் அணை கட்டி உள்ளது. அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய புதிய அணை கட்டி முல்லைப் பெரியாறு அணை நீரை இடுக்கி அணைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபடும் அம்மாநில அரசுக்கு எதிராக தமிழக அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட மாட்டோம் என கேரள அரசு கூற வேண்டும். இல்லையென்றால், இங்கிருந்து கேரளாவிற்குச் செல்லும் பொருட்களை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை மேற்கொள்வோம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: சாலையோரக் கடைகளை அகற்றும்போது பெண் உயிரிழப்பு.. வியாபாரிகள் போராட்டம்! - Chennai Street vendor death issue

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.