ETV Bharat / state

வாழும்போது உடல் உறுப்பு தானம் அளிப்பதில் தமிழ்நாடு இரண்டாம் இடம்; உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் சாதனை! - TN Organ Donation

TN Organ Donation: உறுப்புகள், திசுக்கள் தானம் செய்வதில் இரண்டாவது சிறந்த மாநிலத்திற்கான விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

சித்தரிப்புப் படம்
சித்தரிப்புப் படம் (CREDIT -ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 8:16 PM IST

சென்னை: வாழும்போதே சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறவினர்கள் மூலம் உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதே போல, அதிகளவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டத்தில், தமிழ்நாடு 595 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளது.

மேலும், இந்தியாவில் 2023ம் ஆண்டில் இறந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட 178 உடல்களில் இருந்து உறுப்புகளைப் பெற்று காத்திருப்பவர்களுக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 3ம் தேதி இந்திய உறுப்பு தானம் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மரணத்திற்குப் பிறகு உறுப்புகள், திசுக்களை தானம் செய்ய மக்களை ஊக்குவிக்கவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேசிய உடல் உறுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மாநில உடல் உறுப்பு ஆணையம் (SOTTO -State Organ and Tissue Transplant Organisation) மாநிலத்திற்கான விருது வழங்கப்படும்.

இதன்படி, இந்தாண்டு தெலங்கானா முதலிடத்தையும், இரண்டாவது சிறந்த மாநிலத்திற்கான விருதை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவும் பெற்றுள்ளது. மேலும் 2023ஆம் ஆண்டுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான அறிக்கையையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆண்டில் ஐனவரி முதல் டிசம்பர் வரையில் 16,542 பேர் உடல் உறுப்பு தானம் பெற்றப்பட்டுள்ளது. 15,436 பேர் உடல் உறுப்பு தானம் பெற்றவர்கள் உயிருடன் உள்ளனர். உறுப்பு தானம் பெற்றவர்களில் 1,099 பேர் இறந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டில் 18,378 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

இதில், 13,426 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், 4,491 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும், 221 இதய மாற்று அறுவை சிகிச்சையும், 197 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும், 27 கணையம் மாற்று அறுவை சிகிச்சையும், 16 சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. இறந்த பின்பு உறுப்பு தானம் செய்தவர்களை பொறுத்தவரையில் தெலங்கானாவில் 252 பேரும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தலா 178 பேரும் உறுப்பு தானம் அளித்துள்ளனர்.

இறந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட உடல் உறுப்புகளை காத்திருப்பவர்களுக்கு அளிக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை பொறுத்தவரையில் தமிழகத்தில் 595 அறுவை சிகிச்சைகளும், தெலுங்கானாவில் 546 அறுவை சிகிச்சைகளும், கர்நாடகாவில் 471 அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் தான் இறந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து உறுப்புகளும் காத்திருப்பவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இதன்படி இறந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட 178 உறுப்புகளும் காத்திருப்பவர்களுக்கு வெற்றிகரமாக அளிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் 252 உடல் உறுப்புகள் தரப்பட்டிருந்தாலும் 200 உடல் உறுப்புகள் மட்டுமே காத்திருப்பவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அறுவை சிகிச்சை: தமிழ்நாட்டில் சிறுநீரகம் அறுவை சிகிச்சை 1,633 பேருக்கும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 1,320 பேருக்கும், இதய மாற்று அறுவை சிகிச்சை 70 பேருக்கும்,நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை 55 பேருக்கும், கணையம் மாற்று அறுவை சிகிச்சை 5 பேருக்கும், சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சை 5 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அதிக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மாநிலங்களின் பட்டியலில் இதய மாற்று அறுவை சிகிச்சையில் முதல் இடத்தையும், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், சிறு குடல் ஆகிய அறுவை சிகிச்சையில் 2வது இடத்தையும், கணையம் மாற்றும் அறுவை சிகிச்சையில் 3 வது இடத்தையும் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மேலாளர் தற்கொலை..சோகத்தில் மூழ்கிய குடும்பம் - chennai online rummy suicide

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.