ETV Bharat / state

தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2024; ஸ்ரீபெரும்புதூரை மீண்டும் கைப்பற்றுமா திமுக? - TN Sriperumbudur RESULT 2024

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் (GFX Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 10:03 PM IST

Updated : Jun 3, 2024, 6:43 PM IST

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டின் 5வது நாடாளுமன்றத் தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் (தனி), மதுரவாயல், அம்பத்தூர், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

2024 இல் வாக்குப்பதிவு எவ்வளவு?: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 23,82,119 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 11,80,263, பெண் வாக்காளர்கள் 12,01,427 மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 429 பேரும் அடங்குவர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 14,35, 243 பேர் தங்கள் வாக்கினைப் பதிவு செய்த நிலையில், மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 60.25 ஆக உள்ளது. இது கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட 2% குறைவாகும்.

திமுக அபார வெற்றி: கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, பாமக (அதிமுக கூட்டணி), நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் என நான்குமுனை போட்டி நிலவியது. அப்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 22,53,041. இவர்களில் ஆண்கள் 11,22,731, பெண்கள் 11,29,970 மூன்றாம் பாலினத்தவர் 340 உள்ள நிலையில், 14,06,782 வாக்குகள் (65.7%) பதிவாகின.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு 7,93,281 வாக்குகளை குவித்தார். பாமகவைச் சேர்ந்த வைத்தியலிங்கம் 2,85,326 வாக்குகளை அள்ளினார். மக்கள் நீதி மையம் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீதர் 1,35,525 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் 84,979 வாக்குகளையும் பெற்றனர். திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு 5,07,955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்தமுறை கள நிலவரம் என்ன? : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது. இதில், திமுக சார்பில் தற்போது சிட்டிங் எம்.பியாக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலுவே மீண்டும் களம் இறங்கியுள்ளார். அதிமுக சார்பில் மருத்துவர் பிரேம்குமார், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வேணுகோபால், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

சாதகமான அம்சங்கள்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவை தவிர, பிற கட்சிகளின் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் அவ்வளவாக அறியப்படாதவர்கள். அத்துடன் திமுக வேட்பாளரை எதிர்த்து எந்த கட்சியும் நட்சத்திர வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இதுவே டி.ஆர்.பாலுவுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

இந்த தொகுதியைப் பொருத்தவரை, திமுகவுக்கு சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும், கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின்போது பெய்த அதிக கனமழையால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு பிரச்னையை சந்தித்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அமைச்சர் உதயநிதி அளித்த வாக்குறுதி: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது டி.ஆர்.பாலுவை ஆதரித்து, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி முழுவதும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், 'டி.ஆர்.பாலுவை ஏழு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால், மாதம் ஒருமுறை உங்கள் தொகுதிக்கு நானே வந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பேன்' என்று வாக்குறுதி அளித்தார்.

தலைவர்கள் பிரச்சாரம்: அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த தொகுதியில், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாரா? அல்லது திமுகவின் கோட்டையாகவே அறியப்படும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் மாற்றம் ஏற்படுமா? என்பது வரும் ஜூன் 4ஆம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024; அதிமுக, திமுக இருமுனைப் போட்டியில் கள்ளக்குறிச்சியை கைப்பற்ற போவது யார்? - Lok Sabha Election 2024

Last Updated : Jun 3, 2024, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.