ETV Bharat / state

சென்னையில் ஸ்மோக் பிஸ்கட்டுக்குத் தடை - உணவுப்பாதுகாப்புத்துறை அதிரடி.! - SMOKE BEEDA SMOKE BISCUITS BAN - SMOKE BEEDA SMOKE BISCUITS BAN

சென்னையில் திரவ நைட்ரஜனை பயன்படுத்தி உடனடியாக உண்ணும் வகையில் தயாரிக்கப்படும், ஸ்மோக் பீடா, ஸ்மோக் பிஸ்கட் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக, மாநில உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

smoke beeda smoke biscuits
smoke beeda smoke biscuits
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 1:11 PM IST

Updated : Apr 26, 2024, 2:06 PM IST

சென்னை: சென்னையில் திரவ நைட்ரஜனை பயன்படுத்தி உடனடியாக உண்ணும் வகையில் தயாரிக்கப்படும், ஸ்மோக் பீடா, ஸ்மோக் பிஸ்கட், சமைத்த உணவு போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக, மாநில உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஸ்மோக் பிஸ்கட்டை உட்கொண்டு மயங்கிய நிலையில், இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலானது.

இதனை தொடர்ந்து, பொதுமக்கள் உள்ளிட்ட பலர் தரப்பிலும் இருந்து திரவ நைட்ரஜன் உணவுப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக பெரும் பேசு பொருளாக இருந்த இந்த ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் பீடா போன்ற திரவ நைட்ரஜன் உணவுப் பொருட்கள் பயன்பாட்டிற்கு தற்போது முடிவு வந்துள்ளது.

இது குறித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ள, மாநில உணவு பாதுகாப்புத்துறை திரவ நைட்ரஜன் உணவுப் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிப்பதாகவும், அதை மீறி அதை பயன்படுத்துவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நைட்ரஜனை திரவமாகவும், வாயுவாகவும் உணவு பதப்படுத்த மற்றும் பேக்கிங் உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அதற்கும் உணவுப் பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைட்ரஜனை எதற்காகவெல்லாம் பயன்படுத்தலாம்?:

  • உற்பத்தி
  • பதப்படுத்துதல்
  • தயாரித்தல்
  • சிகிச்சை
  • பேக்கிங்
  • பேக்கேஜிங்
  • போக்குவரத்து

உள்ளிட்டவற்றிர்க்கு மட்டும் பயன்படுத்த வேண்டும், மேலும், முடிந்தவரை அதை எவ்வளவு குறைவாக பயன்படுத்தி தேவையை பூர்த்தி செய்ய முடிகிறதோ அதை ஆதரிக்க வேண்டும் உள்ளிட்டவை இந்த உத்தரவில் முன்மொழியப்பட்டுள்ளது. அதே நேரம் நிர்ணயிக்கப்பட்ட தரத்திலும் குறைபாடு இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நைட்ரஜன் அனுமதிக்கப்பட்ட உணவு வகைகள்.!

எண்உணவு வகையில் உள்ளடக்கப்பட்ட உணவுப் பொருட்கள்நைட்ரஜன் உணவுச் சேர்ம பயன்பாட்டின் வரம்பு
1தயிர்பொட்டலமிடுவதற்கு
2விப்பிங் கிரீம், ஹெவி கிரீம்,டாப்பிங்ஸ் போன்றவைபொட்டலமிடுவதற்கு மற்றும் அழுத்தம் செலுத்தி பொட்டலமிடுவதற்கு
3முழு, வெட்டப்பட்ட, உரித்த, பழங்கள், தேங்காய் துருவல் போன்றவைபொட்டலமிடுவதற்கு
4பழச்சாறுகள் மற்றும் தேங்காய் தண்ணீர் போன்றவைபொட்டலத்தில் கெட்டுப்போகாமல் இருக்க
5ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காய்கறிகளின் சாறுகள்பொட்டலத்தில் கெட்டுப்போகாமல் இருக்க
6கேரட் ஜூஸ், கான்சென்ட் ரேட் போன்றவைபொட்டலத்தில் கெட்டுப்போகாமல் இருக்க
7காஃபி, காஃபியின் மாற்றுகள், தேநீர், மூலிகை பானங்கள், கோகோவைத் தவிர்த்து பிற சூடான தானிய பானங்கள்பொட்டலமிடுவதற்கும், சமமான நுரைப்பானுக்கும்
8திராட்சை ஒயின்ஒயினில் இருந்து ஆக்ஸிஜனை வெளியேற்றுவதற்கு

தடையை மீறி நைட்ரஜனை பயன்படுத்தினால்?: இதுபோன்ற தேவைகளை தாண்டி வேறு எதற்காகவும் நைட்ரஜனை வாயுவாகவோ அல்லது திரவமாகவோ முற்றிலும் பயன்படுத்த தடை விதிப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதையும் மீறி பயன்படுத்தினால், சட்டத்தின் பிரிவு எண் 55,56,58,59 மற்றும் 63,65,69 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிலும், உணவுப் பாதுகாப்புத்துறையின் உரிமம் பெற்றவர் இந்த தவறை இழைத்தால், அவரின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன், வணிக பணிகளுக்கும் தடை விதிக்கப்படும். அது மட்டும் இன்றி சுமார் ரூ. 2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம், குற்றம் இழைத்தவர் உணவுப் பாதுகாப்புத்துறையின் பதிவுச் சான்றிதழ் பெற்றவராக இருந்தால், அந்த சான்றிதழ் ரத்து செய்யப்படுவதுடன் வணிக செயல்பாடுகளுக்கும் தடை விதித்து அபராதமும் விதிக்கப்படும்.

உரிமமும், சான்றிதழும் இல்லாதவர் இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில், நுகர்வோர் பாதிக்கப்பட்டாலோ அல்லது உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டாலோ அவர் மீது 59, 63,65 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உயிருக்கு உலை வைக்கும் ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் பீடா : மருத்துவர்களின் எச்சரிக்கை.! - Smoke Biscuit Side Effects

Last Updated : Apr 26, 2024, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.