ETV Bharat / state

"தமிழ்நாட்டில் பாஜகவை அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது" - தமிழிசை சௌந்தரராஜன் சூளுரை - Tamilisai Soundararajan - TAMILISAI SOUNDARARAJAN

Tamilisai Soundararajan: தமிழகத்தில் பாஜகவை அரியணையில் ஏற்றாமல் எனது உயிர் போகாது எனவும், அதற்காக தான் ஆளுநர் பதவியைத் துறந்து விட்டு இங்கு வந்துள்ளேன் எனவும் முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன் (Credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 11:21 AM IST

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக சார்பில், "தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்" என்ற தலைப்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பாஜக பொதுக்கூட்ட மேடையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "பாஜக தொண்டர்கள் என்றாலே நல்லவர்கள் தான். 2026 சட்டமன்றத் தேர்தல் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த பொதுக்கூட்டம் சாட்சி. எதையும் எதிர்பார்க்காமல் தானாகச் சேர்ந்த கூட்டம். இக்கூட்டம் வருங்காலம் பாஜகவின் காலம் என்பதை வலியுறுத்துகிறது.

கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கட்டும் பார்க்கலாம்: ஆன்மீகத்தைப் பற்றி பேசாதவர்கள், சனாதனத்தை எதிர்த்தவர்கள் எல்லாம் இன்று முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டி இருக்கிறது. திமுக நடத்தும் முருகன் மாநாடு பாஜகவுக்கு வெற்றி. பெரியார் பெரியார் என்று சொல்லியவர்கள் இன்று முருகா முருகா எனக் கூப்பிடுகிறார்கள். ஆனால் முருகனுக்குத் தெரியும் யாருக்கு ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும் யாருக்கு ஆசீர்வாதம் கொடுக்க வேண்டாம் என்று.

தன் மாமன் ராமனுக்குச் செருப்பு மாலை அணிவித்தவர்களுக்கு முருகன் என்றும் ஆசீர்வாதம் கொடுக்க மாட்டார். முருகனை கொண்டாடவில்லை என்றால் 2026 சட்டமன்றத் தேர்தலில் வீட்டுக்குப் போக வேண்டிய நிலை வரும் என்பதை திமுக உணர்ந்துள்ளது. சமூக பாகுபாடற்ற முதலமைச்சர் ஸ்டாலின் என்றால் நாளை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவிக்க வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தை முதலமைச்சரிடம் இருந்து தமிழகம் எதிர்பார்க்கிறது.

போர் நடக்கும் இடத்திற்கு தைரியமாகச் சென்று அமைதியை ஏற்படுத்துபவர் பிரதமர் மோடி. உலக அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த ஆண்டு பிரதமர் மோடிக்கு தான் வழங்க வேண்டும். உலகை வழி நடத்தும் முன்னோடியாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். 74 லட்சம் பெண்களுக்கு 7,500 கோடியை ஒதுக்கி பெண்களுக்கு பாஜக அங்கீகாரம் வழங்கியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் ஏன் குறைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்படாத அறிக்கை நேற்று சென்றுள்ளது. மாணவர்கள் படிக்கும் பாடப் புத்தகத்தின் விலையை ஏற்றியுள்ளனர்.

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் தேவையா?: திமுகவில் ஆசிரியர்களாக இருக்க வேண்டியவர்களை வாரிசு அரசியல் அடக்கி வைத்து மாணவர்களாகவே வைத்துள்ளது. திமுகவை சேர்ந்தவர்கள் உதயநிதியை கொண்டாடுவதை சிந்திக்க வேண்டும். அழகி போட்டியில் இட ஒதுக்கீடு வேண்டுமெனக் கேட்கும் அறிவார்ந்த எதிர்க்கட்சித் தலைவரை இந்தியா பெற்றுள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் திமுக எதிராக இருந்துள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லை, மின்கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு. இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியில் கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்தவர்களுக்கு ரூ.10 லட்சம் தேவையா. குடிப்பவர்களை தடுக்க வேண்டும் என எண்ணாத ஒரு ஆட்சி திமுக ஆட்சி. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம், பட்டாசு ஆலை வெடித்து இறந்தால் ஒன்றும் இல்லை?. தமிழகத்தில் பாஜகவை அரியணையில் ஏற்றாமல் எனது உயிர் போகாது. அதற்காக தான் ஆளுநர் பதவியைத் துறந்து விட்டு இங்கு வந்துள்ளேன்.

நேரடியாக ஸ்டிக்கர் ஒட்டும் ஸ்டாலின்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டேன். பெண்களின் பாதுகாப்பை நீக்கி முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார். மறைமுகமாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்த ஸ்டாலின் தற்போது நேர்முகமாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வருகிறார். பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டத்திற்குப் பிறகு ஓய்வூதியம் பெறுபவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறைமுகமாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், முதல்வர் மருந்தகம் என்ற பெயரில் நேரடியாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார். மக்கள் தாமரையைத் தேடி ஓடி விடுவார்களோ என்ற பயத்தில் பிரதமரின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார். ஆனால், 2026-ல் பாஜக ஆட்சி அமையும், அப்போது சட்டமன்றத்தில், செங்கோல் பிரதமர் கையால் நிறுவப்படும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - Etv Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "அண்ணாவைப் பின்பற்றியவர்கள் ஆண்டாளையும் பின்பற்ற வேண்டி இருக்கும்" - தமிழிசை செந்தரராஜன் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.