சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழிசை செளந்தரராஜன் மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் நேரடியான, நேர்மையான அரசியலுக்காக வந்துள்ளேன் என ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செள்ந்தரராஜன் தெரிவித்த நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று தமிழக பாஜக தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
2019வது நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடியில் களம் இறங்கிய தமிழிசை, திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக.. யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டி?