சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது அரசியில் கேரியரானது கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய அன்றைய தினத்தில் இருந்தே அவரது நகர்வுகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்தது.
இந்நிலையில் தவெக மாநாடு பணிகளுக்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்த கட்சியாக அங்கீகரித்தது. அதுமட்டுமின்றி, மாநாடு நடத்துவதற்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதியும் அளித்துள்ளது. இந்நிலையில் இன்று விஜய் தந்தை பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடந்து விஜயை பல அரசியல் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், இது குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “விஜய் திராவிட சாயத்தை பூசிக்கொண்டு இருக்கிறார் என்ற விமர்சனத்தை முன் வைத்தார். மேலும் இந்த கருத்து குறித்து திராவிட கட்சிகளின் தலைவர்களிடம் ஈடிவி பாரத் தமிழுக்கு பேட்டியளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறுகையில், "மானமுள்ள தமிழன் யாராக இருந்தாலும் பெரியாரை வணங்கவும், மரியாதையும் செலுத்தவும் உரிமை உள்ளது.
இதையும் படிங்க: “விஜய் திராவிட சாயத்தை பூசிக்கொண்டு இருக்கிறார்!" - தமிழசை சௌந்தரராஜன் விமர்சனம்
திமுகவின் வாக்கு வங்கி எந்த சக்தியாலும் ப்ரிக்க முடியாது. நாங்கள் திடமாக அரசியல் பயணம் மேற்கொள்ளுகிறோம். எனவே யாரை பார்த்தும் கவலைஇல்லை" எனத் தெரிவித்தார். இதையடுத்து பேசிய அஇஅதிமுக இலக்கிய அணி செயலாளரும், செய்தித் தொடர்பு செயலாளருமான, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், இதில் கருத்து கூறும் அளவிற்கு ஒன்றுமில்லை” என பதிலளித்துள்ளார்.